பெண்கள் பனங்கற்கண்டு கட்டாயம் சாப்பிடணும். ஏன் தெரியுமா?

By Gowthami Subramani
18 Dec 2024, 21:08 IST

பெண்கள் பனங்கற்கண்டு சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்குப் பல்வேறு நன்மைகளைத் தருகிறது. இதில் பெண்கள் பனங்கற்கண்டு சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகளைக் காணலாம்

ஊட்டச்சத்துக்கள்

இதில் வைட்டமின்கள் பி1, பி2, பி3 மற்றும் பி6 போன்ற வைட்டமின்களும், இரும்பு, கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் துத்தநாகம் போன்ற தாதுக்களும் நிறைந்துள்ளது

எடை மேலாண்மைக்கு

பனங்கற்கண்டில் நிறைந்த ஊட்டச்சத்துக்கள் எடையிழப்பு முயற்சியில் ஈடுபடுபவர்களுக்கு மிகுந்த நன்மை பயக்கும்

செரிமான ஆரோக்கியம்

பனங்கற்கண்டில் உள்ள ஊட்டச்சத்துக்கள் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது

ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்த

பனங்கற்கண்டு ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டதாகும். இவை வீக்கம் மற்றும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது

எலும்பு, பற்கள் வலிமைக்கு

பனங்கற்கண்டில் கால்சியம், இரும்பு மற்றும் பாஸ்பரஸ் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளது. இது வலுவான எலும்புகள் மற்றும் பற்களுக்கு முக்கியமானவையாகும்

ஆற்றல் மேம்பாட்டிற்கு

பனங்கற்கண்டு ஒரு சிறந்த ஆற்றல் மூலமாகும். ஏனெனில், இது விரைவாக உடைந்து எளிதில் உடலால் உறிஞ்சப்படுகிறது. எனவே இது ஆற்றல் மேம்பாட்டிற்கு உதவுகிறது