மக்காடமியா நட்ஸ் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

By Gowthami Subramani
29 Oct 2024, 18:31 IST

மக்காடாமியா நட்ஸ் ஆனது அதன் கிரீமி அமைப்பு மற்றும் வெண்ணெய் சுவையுடன் கூடிய சுவையைத் தருவது மட்டுமல்லாமல், பல்வேறு ஆரோக்கிய நன்மைகளையும் தருகிறது

ஊட்டச்சத்துக்கள் நிறைந்த

மக்காடாமியா நட்ஸ் வகைகளில் வைட்டமின் பி1, மெக்னீசியம் மற்றும் மாங்கனீஸ் போன்ற அத்தியாவசிய வைட்டமின்கள், தாதுப்பொருட்களைத் தருகிறது. மேலும் இது வைட்டமின்கள் ஏ, டி, ஈ மற்றும் கே போன்ற கொழுப்பில் கரையக்கூடிய ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதை மேம்படுத்துகிறது

இரத்த சர்க்கரையைக் கட்டுப்படுத்த

இதில் உள்ள ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் நார்ச்சத்து உள்ளடக்கம் இரத்த குளுக்கோஸ் அளவை உறுதிப்படுத்த உதவுகிறது. மேலும் இது வகை 2 நீரிழிவு அபாயத்தை குறைக்கிறது

செரிமான ஆரோக்கியத்திற்கு

மக்காடாமியா நட்ஸ்களில் உள்ள ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் நார்ச்சத்துக்கள் போன்றவை வழக்கமான குடல் இயக்கங்களை ஊக்குவித்து, மலச்சிக்கலைத் தடுப்பதன் மூலம் ஆரோக்கியமான செரிமான அமைப்பைத் தருகிறது

இதய ஆரோக்கியத்திற்கு

மக்காடமியா நட்ஸ்களில் நிறைந்துள்ள ஆரோக்கியமான கொழுப்புகள் வீக்கத்தை எதிர்த்துப் போராடவும், கெட்ட கொழுப்பைக் குறைக்கவும் உதவும். இதன் மூலம் இதய நோய் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது

ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்த

மக்காடாமியாவில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது. இவை செல்களை சேதத்திலிருந்து பாதுகாக்க உதவுகிறது. இது நீரிழிவு, அல்சைமர் நோய் போன்றவற்றின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது

சருமம், முடி ஆரோக்கியத்திற்கு

மக்காடமியா நட்ஸில் உள்ள வைட்டமின் ஈ சத்துக்கள் ஆரோக்கியமான, ஒளிரும் சருமம் மற்றும் முடிக்கு பங்களிக்கிறது. இது புற ஊதா கதிர்வீச்சிலிருந்து பாதுகாக்கவும், வயதான செயல்முறையைக் குறைக்கவும் உதவுகிறது

மூளை ஆரோக்கியத்திற்கு

மக்காடமியா கொட்டைகளில் உள்ள மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் மூளை ஆரோக்கியத்திற்கு ஊட்டமளிக்கிறது. இவை அறிவாற்றல் செயல்பாட்டை ஆதரிக்கவும், வயது தொடர்பான அறிவாற்றல் வீழ்ச்சியின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது