வெறும் வயிற்றில் வால்நட் சாப்பிடுங்க. என்ன மாற்றங்கள் நடக்கும்னு பாருங்க

By Gowthami Subramani
05 Mar 2024, 10:30 IST

காலையில் வெறும் வயிற்றில் வால்நட் சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு பல்வேறு நன்மைகளைத் தரலாம். இதில் தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவதன் பயன்களைக் காணலாம்

ஊட்டச்சத்துக்கள் நிறைந்த

வால்நட் பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்கள் மிகுந்த பருப்பாகும். இது சுவை மிக்கது மட்டுமல்லாமல், உடலில் பல நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகிறது

இதய ஆரோக்கியத்திற்கு

வால்நட்ஸில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. இவை இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். மேலும் இது கொலஸ்ட்ராலைக் குறைப்பதுடன், இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது

செரிமான ஆரோக்கியத்திற்கு

வால்நட் பருப்பில் நிறைந்துள்ள நார்ச்சத்துக்கள் செரிமான அமைப்பை பலப்படுத்துகிறது. இவை மலச்சிக்கல் பிரச்சனையை நீக்க உதவுகிறது

மூளைத் திறன் அதிகரிக்க

இந்த பருப்பில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மூளையின் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. இது நினைவாற்றலை மேம்படுத்துகிறது

உடல் எடை இழப்புக்கு

வால்நட் பருப்பில் உள்ள நார்ச்சத்துக்கள் மற்றும் புரதம் நீண்ட நேரம் நிறைவான உணர்வைத் தருவதுடன், பசியைக் கட்டுப்படுத்துகிறது. இது உடல் எடையைக் குறைக்க காரணமாகிறது