பருப்பு வகைகள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அதே சமயம் ஊறவைத்த கொண்டைக்கடலையை தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் உடல் தொடர்பான பல பிரச்சினைகள் நீங்கும் என்பது உங்களுக்கு தெரியுமா? இதன் அட்டகாசமான நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
இரத்த சர்க்கரை
ஊறவைத்த பருப்பில் நார்ச்சத்து மற்றும் புரதம் போன்ற ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இந்நிலையில், காலையில் வெறும் வயிற்றில் அவற்றை உட்கொள்வதன் மூலம் இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்கும்.
சிறந்த செரிமானம்
ஊறவைத்த உளுந்தை தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் செரிமான மண்டலம் வலுவடையும். இதில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. இது உணவை சரியாக ஜீரணிக்க உதவுகிறது.
உடல் எடை
கொண்டை கடலையில் கிளைசெமிக் இன்டெக்ஸ் உள்ளது, இது பசியைக் குறைக்கிறது மற்றும் உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. காலையில் ஊறவைத்த சுண்டல் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
புற்றுநோய் அபாயம்
ஊறவைத்த சுண்டலை தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவது புற்றுநோய் அபாயத்தை குறைக்கும் என ஆய்வுகள் கூறுகிறது. இதில், ப்யூட்ரேட் என்ற கொழுப்பு அமிலம் உள்ளது. இது புற்றுநோயை உருவாக்கும் செல்களை அகற்ற உதவுகிறது.
கண்களுக்கு நல்லது
ஊறவைத்த சுண்டல் சாப்பிடுவது கண்களுக்கு நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. இதனை, உட்கொள்வதால் கண்கள் ஆரோக்கியமாக இருப்பதுடன், அது தொடர்பான பிரச்சனைகளும் குறையும்.
இரத்த சோகை
ஊறவைத்த உளுந்தை தினமும் சாப்பிட்டு வந்தால் இரத்த சோகை குணமாகும். இதனை உட்கொள்வதால் இரும்புச்சத்து கிடைப்பதுடன் உடலை ஆரோக்கியமாகவும் வைக்கலாம்.
முடி ஆரோக்கியம்
ஊறவைத்த பருப்பில் வைட்டமின் ஏ, பி மற்றும் வைட்டமின் ஈ உள்ளது. இந்நிலையில், அதை உட்கொள்வது முடியை ஆரோக்கியமாகவும் வலுவாகவும் வைத்திருக்க உதவுகிறது.