காலையில் ஊறவைத்த அத்திப்பழம் சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு மிகுந்த நன்மை பயக்கும். இதில் ஊறவைத்த அத்திப்பழம் சாப்பிடுவதன் நன்மைகளைக் காணலாம்
உடல் எடையிழப்பு
அத்திப்பழத்தில் குறைந்த கலோரிகள் மற்றும் அதிக நார்ச்சத்துக்கள் உள்ளது. இது முழுமை உணர்வை அளித்து பசியைக் குறைக்கிறது. அத்திப்பழத்தில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் செரிமானம் மற்றும் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தவும், உடல் எடையிழப்புக்கும் உதவுகிறது
இரத்த சர்க்கரை அளவு
அத்திப்பழத்தில் உள்ள நார்ச்சத்துக்கள் உடலில் இரத்த சர்க்கரை அளவை பராமரிக்க உதவுகிறது. இவை நீரிழிவு நோயாளிகளுக்கு மிகுந்த நன்மை பயக்கும்
இதய ஆரோக்கியத்திற்கு
அத்திப்பழத்தில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும் இவை இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
மாதவிடாய் ஆரோக்கியத்திற்கு
அத்திப்பழத்தில் இரும்பு, மெக்னீசியம் மற்றும் துத்தநாகம் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளது, இவை மாதவிடாய் ஆரோக்கியத்திற்கு மிகுந்த நன்மை பயக்கும்
இரத்த சோகையைத் தவிர்க்க
அத்திப்பழம் இரும்புச்சத்துக்கான சிறந்த மூலமாகும். இது இரும்புச்சத்து குறைபாட்டால் ஏற்படும் இரத்த சோகையைத் தடுக்க உதவுகிறது. மேலும் இது ஆரோக்கியமான இரும்பின் அளவை பராமரிக்கவும், சோர்வைத் தவிர்க்கவும் உதவுகிறது
எலும்பு ஆரோக்கியத்திற்கு
அத்திப்பழம் கால்சியம் நிறைந்த சிறந்த மூலமாகும். இந்த ஊட்டச்சத்துக்கள் எலும்புகளை வலுவாக வைத்திருக்க உதவுகிறது
சரும ஆரோக்கியத்திற்கு
அத்திபழம் வைட்டமின்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்த பழமாகும். இவை சருமத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் இயற்கையான பளபளப்பைத் தரவும் உதவுகிறது
மன அழுத்தத்தைத் தவிர்க்க
அத்திப்பழத்தில் மக்னீசியம் சத்துக்கள் உள்ளது. இவை நரம்பு மண்டலத்தை அமைதியாக வைக்க உதவுகிறது. இது மனதை நிதானமாக வைத்து, மன அழுத்தத்தை எதிர்க்க உதவுகிறது