ஊறவைத்த அத்திப்பழத்தை சாப்பிடுவதில் இத்தனை நன்மைகள் இருக்கா?

By Gowthami Subramani
08 May 2024, 13:30 IST

அத்திப்பழம் என்ற அஞ்சீர், ஒரு சுவையான மற்றும் சத்தான பழமாகும். இதை ஓர் இரவில் ஊறவைத்து உட்கொள்வது அவற்றின் ஊட்டச்சத்து மதிப்பை மேம்படுத்துகிறது. இதில் தினசரி உணவில் ஒரு ஊறவைத்த அஞ்சீரை ஏன் சேர்க்க வேண்டும் என்பது குறித்து காணலாம்

உடல் எடை இழப்பிற்கு

அத்திப்பழங்கள் ஒப்பீட்டளவில் குறைந்த கலோரிகளையும், அதிக நார்ச்சத்துக்களையும் கொண்டுள்ளது. ஊறவைத்த அத்திப்பழத்தை உட்கொள்வது நீண்ட நேரம் முழுமையான உணர்வைத் தந்து பசியைக் குறைத்து, எடை இழப்பை ஆதரிக்கிறது

செரிமான ஆரோக்கியத்திற்கு

ஊறவைத்த அத்திப்பழங்கள் நார்ச்சத்துக்கள் நிறைந்த சிறந்த மூலமாகும், இது செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தி குடல் இயக்கத்தை சீராக்குகிறது. மேலும் மலச்சிக்கல்லைத் தடுக்க உதவுகிறது

நீரிழிவு நோயை நிர்வகிக்க

இந்த பழத்தில் இயற்கையான இனிப்பு இருப்பினும், குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது. மேலும் ஊறவைத்த அத்திப்பழத்தில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் இரத்த சர்க்கரை அளவை உறுதிப்படுத்தி நீரிழிவு நோயில் பங்கு வகிக்கிறது

இதய ஆரோக்கியத்திற்கு

அத்திப்பழத்தில் உள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தி, இதய ஆரோக்கியத்தைப் பராமரிக்க உதவுகிறது. ஊறவைத்த அத்திப்பழங்களை உணவில் சேர்த்துக்கொள்வது உயர் இரத்த அழுத்த அபாயத்தைக் குறைத்து இதய செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது

எலும்பு ஆரோக்கியத்திற்கு

ஊறவைத்த அத்திப்பழத்தில் கால்சியம் சத்துக்கள் நிறைந்துள்ளது. இது வலுவான மற்றும் ஆரோக்கியமான எலும்புகளை பராமரிக்க உதவுகிறது. மேலும் எலும்பு இழப்பைத் தடுக்கவும், ஆஸ்டியோபோரோசிஸ் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகிறது

நோயெதிர்ப்பு செயல்பாட்டை மேம்படுத்த

அஞ்சீர் வைட்டமின் சி மற்றும் ஃபிளாவனாய்டுகள் நிறைந்த பழமாகும். இது உடலில் நோயெதிர்ப்பு செயல்பாட்டை மேம்படுத்தி நோய்த்தொற்றுக்களிலிருந்து உடலைப் பாதுகாக்க உதவுகிறது. இவை ஒட்டுமொத்த நோயெதிர்ப்பு செயல்பாட்டை ஆதரிக்கிறது

புற்றுநோய் அபாயத்தைக் குறைக்க

இந்த பழத்தில் கூமரின்கள் மற்றும் ஃபிளாவனாய்டுகள் போன்ற பைட்டோ கெமிக்கல்கள் உள்ளது. இவை புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இதை உட்கொள்வது மார்பக மற்றும் பெருங்குடல் புற்றுநோய் உள்ளிட்ட சில வகையான புற்றுநோய் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது

சரும ஆரோக்கியத்திற்கு

ஊறவைத்த அத்திப்பழத்தில் உள்ள வைட்டமின் ஈ மற்றும் துத்தநாகம் போன்றவை கொலாஜன் உற்பத்தியை ஊக்குவித்து, வீக்கத்தைக் குறைக்கிறது. மேலும் சருமத்தை ஆக்ஸிஜனேற்ற சேதத்திலிருந்து பாதுகாக்க உதவுகிறது

தூக்கத்தின் தரத்தை மேம்படுத்த

இதில் உள்ள டிரிப்டோபனின், செரோடோனின் மற்றும் மெலடோனின் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது தூக்கத்தை ஒழுங்குபடுத்த உதவும் ஹார்மோன்கள் ஆகும். தூங்கும் முன் ஊறவைத்த அத்திப்பழங்களை உண்பது தூக்கத்தின் தரத்தை மேம்படுத்தவும், ஓய்வை ஊக்குவிக்கவும் உதவுகிறது