எள் மற்றும் வெல்லம் இரண்டுமே சுவையானது மட்டுமல்லாமல் உடல் ஆரோக்கியத்திற்கு உதவக்கூடியதாகும். இதில் வெல்லத்துடன் எள் சேர்த்து சாப்பிடுவதால் நம் உடலுக்குக் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் சிலவற்றைக் காணலாம்
ஊட்டச்சத்துக்கள்
எள்ளில் புரதம், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் போன்றவை ஏராளமாக உள்ளது. மேலும் வெல்லம் சர்க்கரைக்கு ஆரோக்கியமான மாற்றாகும். இதில் பாஸ்பரஸ், தாமிரம், கால்சியம், துத்தநாகம் உள்ளிட்ட வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளது
எலும்பு ஆரோக்கியத்திற்கு
எள் விதைகள் கால்சியம், மெக்னீசியத்தின் நல்ல மூலமாகும். இந்த இரண்டு ஊட்டச்சத்துக்களும் எலும்பு ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். எள்ளை வறுத்து வெல்லத்துடன் கலப்பது, ஊட்டச்சத்துக்கள் எளிதில் உறிஞ்சப்படும் தன்மையுடையதாக மாறலாம். இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் மூட்டு வலி மற்றும் பிற எலும்பு பிரச்சினைகளுக்கு நன்மை பயக்கும்
நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த
எள்ளில் வைட்டமின் பி6, ஈ, துத்தநாகம், செலினியம், தாமிரம், இரும்புச்சத்து போன்றவை அதிகம் உள்ளது. இவை நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்தவும், வைரஸ் தொற்றுகளிலிருந்து பாதுகாக்கவும் உதவுகிறது. இதில் உள்ள அதிகளவிலான இரும்புச்சத்துக்கள் இரத்த சோகையைத் தடுக்கவும், ஆற்றலை அதிகரிக்கவும் உதவுகிறது
இரத்த அழுத்தத்தைக் குறைக்க
எள்ளில் அதிகளவு மக்னீசியம் உள்ளது. இது இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், இதன் ஆக்ஸிஜனேற்றிகள் பிளேக் படிவதைத் தடுக்கவும் உதவுகிறது. இதன் மூலம் இந்த ஊட்டச்சத்துக்கள் இதய ஆரோக்கியத்திற்கு மிகுந்த நன்மை பயக்கும்
உடலை சூடாக வைத்திருக்க
வெல்லத்துடன் எள் சேர்த்து உட்கொள்வது வெப்ப விளைவுகளை உருவாக்குகிறது. இதை உட்கொள்வது உடலை சூடாக வைத்திருக்க பெரிதும் உதவுகிறது
முடி, சருமத்தின் தரத்தை மேம்படுத்த
எள்ளில் உள்ள புரதம், கால்சியம், இரும்பு மற்றும் மெக்னீசியம் போன்றவை முடியின் தரத்தை மேம்படுத்தவும், சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவுகிறது. அதே போல, வெல்லம் செரிமான நொதிகளை செயல்படுத்துகிறது