வெறும் வயிற்றில் காய்ந்த திராட்சை சாப்பிடுவதால் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். இது குறித்து இங்கே விரிவாக காண்போம்.
காய்ந்த திராட்சை சத்துக்கள்
திராட்சையில் புரதம், நார்ச்சத்து, இரும்பு, பொட்டாசியம், தாமிரம், வைட்டமின் பி6, மாங்கனீஸ் போன்றவை நிறைந்துள்ளன.
முடி ஆரோக்கியம்
உங்கள் தலைமுடியை வலுப்படுத்த காய்ந்த திராட்சையை வெறும் வயிற்றில் சாப்பிடலாம். இவற்றில் பொட்டாசியம், ஆன்டி-ஆக்ஸிடன்ட், வைட்டமின் பி மற்றும் இரும்புச் சத்து இருப்பதால் முடி உதிர்வதைத் தடுக்கிறது.
கண் ஆரோக்கியம்
வெறும் வயிற்றில் காய்ந்த திராட்சை சாப்பிடுவதால் கண்கள் ஆரோக்கியமாக இருக்கும். இதில் வைட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டின் நிறைந்துள்ளது.
எடை குறையும்
உடல் எடையை குறைக்க வெறும் வயிற்றில் காய்ந்த திராட்சை சாப்பிடலாம். இதில் உள்ள நார்ச்சத்துகள் உங்களை நீண்ட நேரம் நிறைவாக வைத்திருக்கும்.
மலச்சிக்கல் நீங்கும்
வெறும் வயிற்றில் காய்ந்த திராட்சையை உட்கொள்வதன் மூலம், மலச்சிக்கல், அஜீரணம் மற்றும் வாயு போன்ற பிரச்னைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும். இதில் உள்ள நார்ச்சத்து மலம் கழிப்பதில் உள்ள சிரமத்தை நீக்குகிறது.