குளிர்காலத்தில் பூசணி விதைகளை உட்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இதன் ஊட்டச்சத்துக்கள் உடல் எடையைக் குறைப்பதுடன், பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது
நிபுணர் கருத்து
ராம்ஹான்ஸ் தொண்டு மருத்துவமனையின் ஆயுர்வேத மருத்துவர் ஷ்ரே ஷர்மா அவர்கள் கூறுகையில், “பூசணி விதையில் உள்ள வைட்டமின் சி, ஒமேகா-6, மாங்கனீசு, இரும்புச்சத்து போன்றவை நிறைந்துள்ளன. இவை நோய்களை எதிர்த்துப் போராட உதவுகிறது” என்று கூறியுள்ளார்
இதய ஆரோக்கியத்திற்கு
குளிர்காலத்தில் இதயம் தொடர்பான நோய்களின் ஆபத்து பன்மடங்கு அதிகரிக்கலாம். இந்த சூழ்நிலையில் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க விரும்புபவர்கள், பூசணி விதைகளை உட்கொள்ளலாம். இதற்கிடையில் இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது
உடல் எடை குறைய
குளிர்காலத்தில் உடல் எடை வேகமாக அதிகரிக்கலாம். இந்த சூழ்நிலையில் உடல் எடையைக் கட்டுப்படுத்த பூசணி விதைகளை உட்கொள்ளலாம். இதற்கு இதில் உள்ள புரதம், நார்ச்சத்துக்கள் போன்றவையே காரணமாகும்
நோயெதிர்ப்புச் சக்தி அதிகரிக்க
இதில் உள்ள துத்தநாகம், வைட்டமின் ஈ போன்றவை உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவுகிறது
நீரிழிவு நோயாளிகளுக்கு
சர்க்கரை நோயாளிகள் பூசணி விதைகளை உட்கொள்ளலாம். இவை இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது
தோலுக்கு நன்மை பயக்க
குளிர்காலத்தில் பூசணி விதைகளை சாப்பிடுவது சருமத்தை பளபளப்பாக வைத்திருக்க உதவும். இந்த விதைகளில் உள்ள வைட்டமின் ஈ மற்றும் இரும்புச்சத்து போன்றவை சருமத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்
எப்படி உட்கொள்ளலாம்
பூசணி விதைகளை பழச் சாட் அல்லது சாலட்டில் கலந்து சாப்பிடலாம். வெறும் வயிற்றில் பூசணி விதைகள் தண்ணீரில் கலந்து குடிப்பது நன்மை பயக்கும்
இவ்வாறு பூசணி விதைகள் உடலுக்குப் பல வகையான நன்மைகளைத் தருகிறது