வேகன் டயட் இருக்கறதுல இவ்ளோ நன்மைகள் இருக்கா?

By Gowthami Subramani
02 Aug 2024, 09:00 IST

அசைவ உணவு உண்பவர்களை விட சைவ உணவு உண்பவர்கள் நீண்ட காலம் வாழலாம் என ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் சைவ உணவு உண்பதன் நன்மைகளைக் காணலாம்

உடல் எடை இழப்பு

தாவர அடிப்படையிலான உணவை உண்பவர்கள் விலங்கு அடிப்படையிலான உணவை உண்பவர்களை விட குறைவான பிஎம்ஐக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதன் படி, வேகன் டயட் இருப்பவர்கள் உடல் எடையைக் குறைக்கலாம்

குறைந்த கொலஸ்ட்ரால் அளவு

தாவர அடிப்படையிலான உணவுகளில் ஆக்ஸிஜனேற்றங்கள், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் போன்ற கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவும் ஊட்டச்சத்துக்கள் உள்ளது. எனவே வேகன் உணவுகள் குறைந்த கொலஸ்ட்ரால் அளவைக் கொண்டுள்ளது

குடல் ஆரோக்கியத்திற்கு

பதப்படுத்தப்படாத தாவர உணவுகளில் உள்ள நார்ச்சத்துக்கள் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இவை வீக்கத்தைக் குறைக்கவும், கொழுப்பைக் குறைக்கவும், இரத்த சர்க்கரையை மேம்படுத்தவும், குடலியக்கத்தை நிர்வகிக்கவும் உதவுகிறது

வீக்கம் குறைய

தாவர அடிப்படையிலான உணவுகள் வீக்கத்தைக் குறைக்கிறது. இது உடற்பயிற்சிகள் மற்றும் காயங்களிலிருந்து விரைவாக மீட்க உதவுகிறது. மேலும் இது மூட்டு வலி மற்றும் தசைநாண் அழற்சியையும் குறைக்கிறது

மேம்படுத்தப்பட்ட இரத்த அழுத்தம்

தாவர அடிப்படையிலான உணவுகளில் பொட்டாசியம் ஊட்டச்சத்துக்கள் உள்ளது. இவை இரத்த அழுத்தத்தை மேம்படுத்த உதவுகிறது

நாள்பட்ட நோய்கள் குறைவு

தாவர அடிப்படையிலான உணவுகள் உடல் பருமன், நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் சில வகையான புற்றுநோய் போன்ற நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது

டிமென்ஷியா ஆபத்து குறைவு

தாவர அடிப்படையிலான உணவு டிமென்ஷியா அபாயத்தைக் குறைப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் ஏற்கனவே டிமென்ஷியாவால் பாதிக்கப்பட்ட மக்களில் அதன் முன்னேற்றத்தை மெதுவாக்குகிறது