இது தெரிஞ்சா தினமும் நீங்க பிஸ்தா சாப்பிடுவீங்க

By Gowthami Subramani
24 May 2024, 17:30 IST

பிஸ்தா சுவை மட்டுமல்லாமல், பல்வேறு ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்களை வழங்கும் நட்ஸ் வகையாகும். இதை தினமும் உட்கொள்வதில் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

ஊட்டச்சத்துக்கள்

பிஸ்தாவில் நார்ச்சத்துக்கள், ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் புரதங்கள் போன்றவை நிறைந்துள்ளது. இந்த ஊட்டச்சத்துக்கள் பல்வேறு உடல்நல பிரச்சனைகளுக்குத் தீர்வு தருகிறது

எடை இழப்புக்கு

பிஸ்தாவில் அதிக கொழுப்பு இருப்பினும் குறைவான அளவு கலோரிகளே உள்ளது. மேலும் இது நார்ச்சத்து மற்றும் அதிக புரதத்தைக் கொண்டிருப்பதால், வயிறு நிரம்பிய முழுமை உணர்வைத் தருகிறது. இதன் மூலம் உடல் எடையை குறைக்க உதவுகிறது.

செரிமான மேம்பாட்டிற்கு

பிஸ்தாவில் நார்ச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. இவை ஆரோக்கியமான செரிமான அமைப்பை பராமரிக்க உதவுகிறது

இரத்த சர்க்கரையை பராமரிக்க

பிஸ்தா குறைந்த கிளைசெமிக் இன்டெக்ஸ் குறியீட்டைக் கொண்டுள்ளது. அதாவது இவை இரத்த சர்க்கரை அளவில் மிகச்சிறிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மேலும் பிஸ்தாக்கள் கரோட்டினாய்டுகள், பினாலிக் கலவைகள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்களால் நிரம்பியதாகும்

கண் பார்வை ஆரோக்கியத்திற்கு

பிஸ்தாக்கள் ஜீயாக்சாண்டின் மற்றும் லுடீன் போன்ற ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்த நல்ல வளமான மூலமாகும். இவை கண் ஆரோக்கியத்திற்கு முக்கியமானதாகக் கருதப்படுகிறது

இதய ஆரோக்கியத்திற்கு

பிஸ்தா காமா-டோகோபெரோல் மற்றும் பீட்டா கரோட்டின் போன்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகளால் நிரப்பப்பட்டதாகும். இந்த ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ராலைக் குறைத்து இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்கிறது