குளிர்காலத்தில் ஊறுகாய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

By Gowthami Subramani
11 Dec 2024, 13:49 IST

குளிர்காலத்தில் பலரும் செரிமான பிரச்சனை மற்றும் குறைந்த நோயெதிர்ப்புச் சக்தியால் பாதிப்படைகின்றனர். குளிர்ந்த மாதங்களில் எளிய, கசப்பான ஊறுகாய் உட்கொள்வது உடலை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது

எடை இழப்பை ஊக்குவிக்க

குறைந்த கலோரிகள் நிறைந்த ஊறுகாய் பசியைக் கட்டுப்படுத்த உதவுகிறது. எனவே குளிர்ந்த மாதங்களில் எடையைக் கட்டுப்படுத்த விரும்புவோருக்கு ஊறுகாய் ஒரு சிறந்த தீர்வாகும்

இரத்த சர்க்கரையை ஒழுங்குபடுத்த

புளித்த உணவுகளை உட்கொள்வது இன்சுலின் எதிர்ப்பு மற்றும் வீக்கத்திற்கு உதவுகிறது. கூடுதலாக, ஊறுகாயில் உள்ள வினிகர் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தி, நீரிழிவு நோயாளிகளுக்கு மிகுந்த நன்மை பயக்கும்

செரிமான ஆரோக்கியத்திற்கு

ஊறுகாயில் உள்ள காரம் அல்லது வினிகர் ஆனது செரிமான நொதிகளைத் தூண்டி, செரிமானத்தை மேம்படுத்துகிறது. மேலும், இது வீக்கத்தைக் குறைக்கிறது. குளிர்ந்த மாதங்களில் ஏற்படும் செரிமான பிரச்சனைகளைத் தடுக்க ஊறுகாய் உதவுகிறது

நோயெதிர்ப்புச் சக்தி அதிகரிக்க

ஊறுகாயில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளது. இவை உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை வலுப்படுத்தவும், சளி மற்றும் காய்ச்சலைத் தடுக்கவும் உதவுகிறது

இதய நோய் அபாயத்தைக் குறைக்க

பூண்டு, மஞ்சள் மற்றும் மிளகாய் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த ஊறுகாயை உட்கொள்வது ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராட உதவுகிறது. இதன் மூலம் இதய நோய் போன்ற நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்கலாம்

சரும ஆரோக்கியத்திற்கு

ஊறுகாயில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள், முதுமையின் ஆரம்ப அறிகுறிகளை எதிர்த்துப் போராடவும், வறண்ட சருமத்தை எதிர்த்து, கொலாஜன் உற்பத்தியை ஊக்குவிக்கவும் உதவுகிறது