தினமும் ஒரு ஸ்பூன் நெய் போதும். என்ன ஆச்சரியம் நடக்கும்னு பாருங்க.

By Gowthami Subramani
01 Jan 2024, 17:53 IST

தினந்தோறும் தேன் உட்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளைத் தரும். குறிப்பாக குளிர்காலத்தில் தினம் ஒரு ஸ்பூன் தேனை உட்கொள்வது பல வகையான பிரச்சனைகளைத் தடுக்க உதவுகிறது

ஊட்டச்சத்துக்கள் நிறைந்த

தேனில் பல்வேறு வகையான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்து காணப்படுகிறது. இது தவிர அமினோ அமிலங்கள், ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் போன்றவையும் உள்ளது. இவை உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் உதவுகிறது

இருமலைத் தடுக்க

குளிர்காலத்தில் அனைவருக்கும் ஏற்படும் பொதுவான பிரச்சனையான இருமலைத் தடுக்க தேன் எடுத்துக் கொள்ளலாம். இதில் உள்ள ஆன்டி பாக்டீரியல் பண்புகள் உடலில் இருந்து சளியை வெளியேற்ற உதவுகிறது

சரும பராமரிப்பிற்கு

தோல் பராமரிப்புக்கு தேன் மிகவும் அவசியமான ஒன்றாகும். எனவே சரும ஆரோக்கியத்திற்கு தேன் உட்கொள்வது சருமத்திற்கு இயற்கையான பொலிவைத் தரும்

முடி பராமரிப்பு

தேனில் நிறைந்துள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் முடி ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இதன் மூலம் முடி தொடர்பான பல்வேறு பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம்

உடல் எடை குறைய

குளிர்காலத்தில் உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் தினம் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்துக் கொள்ளலாம். இது உடல் எடையை வேகமாகக் குறைக்க விரும்புகிறது. இதற்கு தினமும் தேன் கலந்த வெதுவெதுப்பான நீரை எடுத்துக் கொள்ளலாம்

நோயெதிர்ப்புச் சக்தி அதிகரிக்க

தேனில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இவை நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்துவதன் மூலம் பல்வேறு நோய்த்தொற்றுக்களிலிருந்து உடலைப் பாதுகாக்க உதவுகிறது. இதற்கு தினமும் பாலில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து குடிக்கலாம்

தினமும் தேன் உட்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு பல்வேறு வகைகளில் நன்மை தருகிறது