பூண்டில் காணப்படும் அல்லிசின் என்ற பொருளானது இயற்கையாகவே நோய்க்கிருமிகள் மற்றும் வைரஸ்களுக்கு எதிராக போராடி நோயைத் தடுக்கிறது. இரவு தூங்கும் முன் 1 பல் பூண்டு சாப்பிடுவதால் என்ன மாற்றங்கள் நடக்கும் தெரியுமா?
செரிமான மேம்பாட்டிற்கு
பச்சை பூண்டு சாப்பிடுவது வயிற்றில் குடல் புழுக்களை அகற்றவும், வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகிறது. தூங்கும் முன் ஒரு பல் பூண்டு சாப்பிடுவது செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது
நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க
பூண்டில் உள்ள துத்தநாகம் உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. மேலும் இதன் வைட்டமின் சி சத்துக்கள் நோய்த்தொற்றுக்களைத் தடுக்க உதவுகிறது
குளிர் தொற்றுக்களைத் தவிர்க்க
பூண்டில் குளிர் தொற்றுக்களை எதிர்த்துப் போராடும் ஆற்றலைக் கொண்டுள்ளது. இவை இரவு நேரத்தில் ஏற்படும் நெரிசலுக்கு எதிராக பயனுள்ளதாக அமையும்
உடல் எடை இழப்புக்கு
இது உடலில் தெர்மோஜெனீசிஸைத் தூண்டி, உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பைக் குறைக்க உதவுகிறது
சரும ஆரோக்கியத்திற்கு
பூண்டு உண்பது முகப்பருவைத் தடுக்க உதவுகிறது. இது சருமத்தில் புள்ளிகளை நீக்கி தெளிவான சருமத்தைப் பெற ஏதுவாக அமைகிறது
நச்சு நீக்கத்தன்மை
பூண்டில் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளன. இது உடல் செல்களைப் பாதுகாப்பாக வைப்பதுடன், சிறந்த நச்சு நீக்கியாக செயல்படுகிறது
தூக்கத்தின் தரத்தை மேம்படுத்த
பூண்டு உடலில் செரடோனின் உற்பத்தியைத் தூண்டுகிறது. இது தூக்க சுழற்சியை ஒழுங்குபடுத்த உதவுகிறது