காலையில் முளைத்த பச்சைப்பயறு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

By Gowthami Subramani
10 Dec 2024, 20:08 IST

தினமும் காலை உணவாக முளைத்த பச்சைப்பயிறை உட்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்குப் பல்வேறு நன்மைகளைத் தருகிறது. இதில் முளைத்த பச்சைப்பயறு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளைக் காணலாம்

ஊட்டச்சத்துக்கள் நிறைந்த

முளைத்த பச்சைப்பயிறு ஆனது புரதம், நார்ச்சத்து மற்றும் இன்னும் பிற முக்கிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவையாகும். இதை காலை உணவாக எடுத்துக் கொள்வது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகிறது

செரிமான ஆரோக்கியத்திற்கு

இந்த முளைத்த பச்சைப்பயறில் நிறைந்துள்ள நொதிகள், செரிமான ஆரோக்கியத்திற்கு உதவுகிறது மேலும் இது ஊட்டச்சத்து உறிஞ்சுதலை ஊக்குவிக்கவும், மேம்பட்ட குடல் ஆரோக்கியத்திற்காக மலச்சிக்கலைப் போக்கவும் உதவுகிறது

குறைந்த அளவிலான கலோரிகள்

முளைத்த பச்சைப்பயறு குறைந்த கலோரிகளைக் கொண்டுள்ளதால், இது எடை மேலாண்மைக்கு ஒரு சிறந்த வழியாகக் கருதப்படுகிறது. மேலும், இதன் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் திருப்தியை ஊக்குவித்து எடை பராமரிப்பிற்கு உதவுகிறது

இரத்த சர்க்கரையை சமநிலைப்படுத்த

இது குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது. இவை இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும், நீரிழிவு நோயைப் பராமரிக்கவும் உதவுகிறது

ஆற்றலை அதிகரிக்க

இதில் சிக்கலான கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்திருப்பதால், முளைத்த பச்சைப்பயறு நாள் முழுவதும் நீடித்த ஆற்றலை வழங்குகிறது. மேலும், சோர்வை எதிர்த்துப் போராட வழிவகுக்கிறது

நச்சுக்களை நீக்குவதற்கு

முளைத்த பச்சைப்பயறு கழிவுப்பொருள்களை நீக்கி, கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. இது உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்த உதவுகிறது

நோயெதிர்ப்புச் சக்தி அதிகரிக்க

முளைத்த பச்சைப்பயறு வைட்டமின் சி ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாகும். இவை உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து, நோய்த்தொற்றுக்களை எதிர்த்துப் போராட உதவுகிறது

சரும ஆரோக்கியத்திற்கு

இதில் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளது. இவை ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராட உதவுகிறது. இதன் மூலம் இளமை மற்றும் பளபளப்பான சருமத்தைத் தருகிறது