தினமும் முளைக்கட்டிய பச்சைப்பயறு சாப்பிடுவதன் நன்மைகள்

By Gowthami Subramani
19 Aug 2024, 20:35 IST

பச்சைப்பயறை முளைக்க வைக்கும் போது அது ஊட்டச்சத்து உள்ளடக்கம் நிறைந்த சிறிய முத்துக்களாக மாறுகிறது. இது பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. இதில் முளைகட்டிய பச்சைப்பயறு உட்கொள்வதன் நன்மைகளைக் காணலாம்

உடல் எடையிழப்பிற்கு

முளைத்த பச்சைப்பயறு குறைந்த கலோரிகளைக் கொண்டுள்ளது. இதன் நார்ச்சத்து முழுமை உணர்வைத் தந்து ஒட்டுமொத்த கலோரி உட்கொள்ளைக் குறைக்கிறது. இதன் மூலம் எடையிழப்பில் பயனளிக்கிறது

செரிமான ஆரோக்கியத்திற்கு

முளைத்த பச்சைப்பயறு உட்கொள்வது செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இது சிக்கலான கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் புரதங்களை எளிய வடிவங்களாக உடைத்து உடலை ஜீரணிக்க எளிதாக்குகிறது

நீரிழிவு நோய்க்கு

முளைத்த பச்சைப்பயறுகளில் உள்ள குறைந்த கிளைசெமிக் குறியீட்டு மற்றும் அதிக நார்ச்சத்துக்கள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இரத்த ஓட்டத்தில் சர்க்கரை உறிஞ்சுவதை குறைத்து, இரத்த குளுக்கோஸ் அளவை சீராக பராமரிக்கிறது

இதய ஆரோக்கியத்திற்கு

முளைத்த பருப்பில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள், பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்றவை இதய ஆரோக்கியத்திற்கு உதவும் ஊட்டச்சத்துக்களாகும். இவை ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் மற்றும் வீக்கத்தைக் குறைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது

நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க

முளைத்த பச்சைப்பயறுகளில் உள்ள வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் போன்றவை நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இதிலுள்ள வைட்டமின் ஏ, சி இரண்டும் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது

சரும ஆரோக்கியத்திற்கு

இதில் உள்ள ஃபிளாவனாய்டுகள் மற்றும் பாலிபினால்கள் ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்திலிருந்து சருமத்தைப் பாதுகாக்கிறது. இவை சரும பாதிப்பைக் குறைத்து, முன்கூட்டிய வயதைத் தடுக்கவும் உதவுகிறது