மருத்துவ குணங்கள் நிறைந்த புதினாவில் பல சத்துக்கள் இருக்கிறது. இதை உட்கொள்வது பல உடல்நலப் பிரச்சனைகளை சரிசெய்யும்.
புதினா எப்படி சாப்பிட வேண்டும்?
புதினா இலைகளை மென்று சாப்பிடலாம். அல்லது சட்சி, மின்ட் ட்ரிங்க்ஸ் ஆகவும் குடிக்கலாம். இது டிடாக்ஸ் பண்புகளை கொண்டுள்ளது.
உடல் நச்சு நீங்கும்
புதினா இலைகளின் நீரை உட்கொள்வது உடலை நச்சுத்தன்மை அற்றதாக மாற்றும். உடலில் இருந்து நச்சுக்களை அகற்ற இது உதவுகிறது.
மன அழுத்தம் குறைக்க உதவும்
புதினாவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது மன அழுத்தம் மற்றும் வீக்கத்தை குறைக்கவும் உதவுகிறது.
சரும ஆரோக்கியம் மற்றும் எடை குறைக்க உதவும்
புதினாவில் பல சத்துக்கள் உள்ளது. இந்த டிடாக்ஸ் நீர் உடல் எடையை குறைக்கவும், சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும்.
நோய் எதிர்ப்பு சக்தி
வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் நிறைந்த புதினா நீரை உட்கொள்வது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
வாய் துர்நாற்றம் போக்குவது உட்பட பல ஆரோக்கிய நன்மைகள் இதில் உள்ளது. உடல்நலம் தொடர்பான தகவல்களுக்கு OnlyMyHealth உடன் இணைந்திருங்கள்.