குளிர்காலத்தில் வெந்தயக்கீரையை நீங்க கண்டிப்பா சாப்பிடணும்

By Gowthami Subramani
08 Dec 2024, 21:37 IST

குளிர்காலத்தில் ஊட்டச்சத்துக்கள் நிரம்பிய எளிய பச்சை இலைக்காய்கறியான வெந்தயக் கீரையை உட்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு பல்வேறு நன்மைகளைத் தருகிறது. இதில் குளிர்காலத்தில் வெந்தயக்கீரை சாப்பிடுவதன் நன்மைகளைக் காணலாம்

எடையிழப்பை ஊக்குவிக்க

வெந்தயக்கீரையில் உள்ள நார்ச்சத்துக்கள் மனநிறைவை ஊக்குவிக்கிறது. இது பசி வேதனையைக் குறைக்கிறது மற்றும் அதிகம் சாப்பிடுவதைத் தடுக்கிறது. இவ்வாறு அதிக கலோரி உட்கொள்ளலைக் குறைப்பதன் மூலம் குளிர்காலத்தில் எடையை நிர்வகிக்கலாம்

இரத்த சர்க்கரையைக் கட்டுப்படுத்த

வெந்தயக்கீரையில் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும் கலவைகள் நிறைந்துள்ளது. இதில் குறைந்த கிளைசெமிக் குறியீடு நிறைந்துள்ளதால், நீரிழிவு நோயாளிகளிகளுக்கு நன்மை பயக்கும்

இரும்புச்சத்து நிறைந்த

வெந்தயக் கீரையானது இரும்பின் சிறந்த மூலமாகும். இது இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியை ஊக்குவிக்கவும், இரத்த சோகையை எதிர்த்துப் போராட உதவுகிறது. குறிப்பாக, குளிர்காலத்தில் உடல் சோர்வை சந்திப்பவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக அமைகிறது

செரிமான மேம்பாட்டிற்கு

வெந்தயக் கீரை நார்ச்சத்துக்கான இயற்கை மூலமாகும். இவை செரிமானத்தை மேம்படுத்தவும், மலச்சிக்கல்லைத் தடுக்கவும் உதவுகிறது

நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க

வெந்தயத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இவை இரண்டுமே நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரித்து குளிர்கால நோய்களுக்கு எதிராக உடலைப் பாதுகாக்கிறது

எலும்பு ஆரோக்கியத்திற்கு

வெந்தய இலைகளில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் குளிர்காலத்தில் ஏற்படும் பொதுவான பிரச்சனையான மூட்டு வலி மற்றும் வீக்கத்தை போக்க உதவுகிறது

சுவாச ஆரோக்கியத்தை மேம்படுத்த

குளிர் மாதங்களில் சுவாச பிரச்சனைகள் அதிகரிக்கும் சூழ்நிலையாகும். இதை உட்கொள்வது சுவாச அமைப்பிலிருந்து சளியை அகற்ற உதவுகிறது. இது இருமல், நெரிசல் அபாயத்தைக் குறைக்கிறது

சரும ஆரோக்கியத்திற்கு

வெந்தய இலைகளில் அதிக அளவு வைட்டமின் சி, பிற ஆக்ஸிஜனேற்றங்கள் இருப்பதால் இவை கொலாஜன் உற்பத்திக்கு உதவுகிறது. இது வறண்ட குளிர்காலக் காற்றினால் ஏற்படும் வறட்சி மற்றும் எரிச்சலைத் தடுக்க உதவுகிறது