குளிர்காலத்தில் இனிப்பு சாப்பிடுவதற்கான ஆர்வம் அதிகமாகவே இருக்கும். இதற்கு வெல்லம் ஒரு சிறந்த தேர்வாகும். அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த வெல்லத்தைக் குளிர்காலத்தில் சாப்பிடுவது பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது
செரிமான ஆரோக்கியத்திற்கு
வெல்லம் செரிமான நொதிகளைத் தூண்டவும், சிறந்த செரிமானத்தை ஊக்குவிக்கவும் உதவுகிறது. குறிப்பாக, குளிர்கால மாதங்களில் ஏற்படும் மலச்சிக்கல்லைத் தடுக்க உதவுகிறது
இருமல், ஜலதோஷம் நீங்க
வெல்லத்தில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளது. இவை தொண்டை புண் ஆற்றவும், குளிர்காலத்தில் ஏற்படும் இருமலை போக்கவும் உதவுகிறது
ஆற்றலை வழங்க
வெல்லம் இரும்பு மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்ததாகும். இதை உட்கொள்வது உடனடி ஆற்றலைத் தருகிறது. எனவே குளிர்காலத்தில் உற்சாகமாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்க வெல்லம் உட்கொள்ளலாம்
நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க
வெல்லம் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்ததாகும். எனவே இது உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும், பருவகால நோய்களிலிருந்து உடலைப் பாதுகாக்கவும் உதவுகிறது
சரும ஆரோக்கியத்திற்கு
வெல்லமானது ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் இன்னும் பிற ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாகும். இது வறண்ட குளிர்காற்றை எதிர்த்து சருமத்தை ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்க உதவுகிறது