குளிர்காலத்தில் ஏற்படும் செரிமானப் பிரச்சனைகளை பலரும் சந்திப்பர். இந்த பிரச்சனைகளிலிருந்து விடுபட கொய்யாப்பழங்கள் பெரிதும் உதவுகின்றன. குளிர்காலத்தில் கொய்யாப்பழம் எடுத்துக் கொள்வதால் கிடைக்கும் நன்மைகளைக் காணலாம்
ஊட்டச்சத்துக்கள்
கொய்யா பழத்தில் வைட்டமின் சி மற்றும் எ, மக்னீசியம், நார்ச்சத்துக்கள், புரதச்சத்து, கார்போஹைட்ரேட், கால்சியம், மாங்கனீசு, பொட்டாசியம் போன்றவை நிறைந்துள்ளன. மேலும், இதில் குறைந்த கலோரிகளே உள்ளன
நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்க
குளிர்காலத்தில் இயல்பாகவே சளி மற்றும் காய்ச்சல் போன்ற நோய்த் தாக்கங்கள் அதிகமாக இருக்கும். இதிலிருந்து விடுபட வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்த கொய்யாபழத்தை எடுத்துக் கொள்ளலாம். இவை காய்ச்சல், சளி போன்றவற்றிலிருந்து நிவாரணம் தருகிறது
மலச்சிக்கல்
அஜீரணக் கோளாறுகள், மலச்சிக்கல் மற்றும் குடல் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படுவதற்கு நார்ச்சத்து பற்றாக்குறையே காரணமாகும். இதற்கு கொய்யாபழத்தை எடுத்துக் கொள்ளலாம்
உடல் எடை குறைய
குளிர்காலங்களில் உடல் செயல்பாடுகள் குறைந்து விடுவதால் உடல் எடை அதிகமாகலாம். கொய்யாப்பழத்தில் உள்ள நார்ச்சத்துக்கள், புரதம், மினரல்கள் போன்றவை உடல் எடையைக் குறைக்க உதவுகிறது
நீரிழிவு நோயாளிகளுக்கு
குளிர்காலங்களில் அதிகரிக்கும் உடல் எடை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், சர்க்கரை அளவு அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. கொய்யாப்பழம் குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளதால் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்காது
மன அழுத்தம்
பருவ கால மாற்றத்தின் போது ஏற்படும் மன அழுத்தத்திற்கான காரணிகளைக் குறைக்க கொய்யாப்பழம் உதவுகிறது. இதில் உள்ள மக்னீசியம் சத்துக்கள் மன அழுத்தத்தைப் போக்க உதவுகிறது