கொய்யாப்பழம் அதன் தனித்துவமான சுவையைத் தவிர மழைக்காலத்தில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. இதில் மழைக்காலத்தில் கொய்யாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளைக் காணலாம்
நோயெதிர்ப்புச் சக்தி அதிகரிக்க
ஆரஞ்சு பழத்துடன் ஒப்பிடுகையில் கொய்யாவில் 4 மடங்கு வைட்டமின் சி உள்ளது. இது உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும், நோய்த்தொற்றுக்களிலிருந்து பாதுகாக்கவும் உதவுகிறது
இதய ஆரோக்கியத்திற்கு
கொய்யாப்பழம் உட்கொள்வது உடலின் சோடியம் மற்றும் பொட்டாசியம் சமநிலையை மேம்படுத்துகிறது. இவை கொலஸ்ட்ராலை நிர்வகிக்கவும், இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது
மலச்சிக்கல்லை குணப்படுத்த
கொய்யாபழத்தில் உள்ள நார்ச்சத்துக்கள் மலச்சிக்கல் பிரச்சனைக்கு உதவுகிறது. இந்த பழத்தின் விதைகள் ஆரோக்கியமான குடல் இயக்கத்தை ஊக்குவிக்க உதவுகிறது
நீரிழிவு நோய்க்கு
கொய்யாப்பழத்தில் நார்ச்சத்துக்கள் மற்றும் குறைந்த கிளைசெமிக் குறியீடுகள் நிறைந்துள்ளது. இவை இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும், நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது
பல் வலியைப் போக்குவதற்கு
பல் வலிக்கு கொய்யா இலைகள் ஒரு அருமையான வீட்டு வைத்தியமாகக் கருதப்படுகிறது. இந்த இலைகளின் சாற்றைக் கொண்டு பல்வலி, ஈறு வீக்கம் மற்றும் வாய் புண்களை குணப்படுத்தலாம்
கண்பார்வை மேம்பாட்டிற்கு
கொய்யாவில் உள்ள வைட்டமின் ஏ சத்துக்கள் கண் பார்வை ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இவை பார்வைக் குறைபாட்டைத் தடுப்பதுடன், அதை மேம்படுத்தவும் உதவுகிறது
மன அழுத்தத்தைக் குறைக்க
பருவகால மாற்றங்களினால் ஏற்படும் மன அழுத்தத்தைக் குறைக்க கொய்யாப்பழத்தில் உள்ள மக்னீசியம் சத்துக்கள் உதவுகிறது. மேலும் இது உடலில் தசைகள் மற்றும் நரம்புகளைத் தளர்த்த உதவுகிறது