குளிர்காலத்தில் இஞ்சி கட்டாயம் சாப்பிடணும். ஏன் தெரியுமா?

By Gowthami Subramani
06 Dec 2024, 21:15 IST

இஞ்சி ஒரு சமையலறை பொருள் மட்டுமல்லாமல், ஆரோக்கிய நலன் மிகுந்ததாகவும் அமைகிறது. இது குளிர்கால நோய்களைத் தடுக்கவும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. இதில் குளிர்காலத்தில் இஞ்சி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளைக் காணலாம்

தொண்டை வலி நீங்க

இஞ்சி அழற்சி எதிர்ப்புப் பண்புகள் நிறைந்ததாகும். எனவே இவை இருமலைக் குறைக்கவும், தொண்டை புண்களை ஆற்றவும் உதவுகிறது. இது குளிர்ந்த காலநிலையில் சிறந்த தேர்வாகும்

தலைவலி நீங்க

இஞ்சியில் நிறைந்துள்ள அழற்சி எதிர்ப்புப் பண்புகள் குளிர்ந்த காலநிலையில் ஏற்படும் தலைவலி மற்றும் ஒற்றைத் தலைவலியைப் போக்க உதவுகிறது

குமட்டலை நீக்க

இஞ்சியைக் கொண்டு தயார் செய்யப்படும் சூடான இஞ்சி டீ சளியின் போது குமட்டலை விரைவில் போக்க உதவுகிறது

இதய ஆரோக்கியத்திற்கு

இஞ்சி உட்கொள்வது இஞ்சி கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகிறது. மேலும், இது குளிர்கால மாதங்களில் ஏற்படும் இதய பாதிப்பைத் தருக்கிறது

நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க

இஞ்சியில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்து காணப்படுகிறது. இவை உடலில் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தவும், குளிர்கால சளி மற்றும் காய்ச்சலை எதிர்த்து போராடவும் உதவுகிறது