வாழை இலையில் உணவு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

By Karthick M
02 Jun 2025, 22:54 IST

வாழை இலைகளில் பாலிபினால்கள் எனப்படும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளன, இவை க்ரீன் டீ இலைகள் மற்றும் சில இலை காய்கறிகளிலும் காணப்படுகின்றன.

வாழை இலை ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் புற்றுநோய் மற்றும் பல வாழ்க்கை முறை நோய்களைத் தடுப்பதிலும் திறம்பட செயல்படுகின்றன.

வாஷிங் பவுடர் , ஜெல் இரசாயனம் என்னதான் கழுவினாலும் பாத்திரங்களில் ஒட்டக்கூடும். இது ஆரோக்கியத்தில் தீங்கு ஏற்படுத்தும், இதை தவிர்க்க வாழை இலை உதவும்.

வாழை இலையில் பரிமாறப்படும் உணவு சுவையாக மாறும். வாழை இலைகளை வெவ்வேறு வடிவங்களில் வெட்டி எந்த அளவு தட்டில் வைக்கலாம்.

பொதுவாக இயற்கை முறையை பின்பற்றுவது உடலுக்கு மிக நல்லது, தினசரி இல்லை என்றாலும் முக்கிய நாளிலாவது வாழை இலை பயன்படுத்த முயற்சி செய்யுங்கள்.