இரவு உணவு எடுத்துக் கொள்ளும் நேரம் உடல் ஆரோக்கியத்திற்கு மிகுந்த நன்மை பயக்கும். அதன் படி, இரவு 7 மணிக்கு முன்னதாக உணவை எடுத்துக் கொள்வதால் கிடைக்கும் நன்மைகளைக் காணலாம்
எடையிழப்புக்கு
இரவு நேரத்தில் அதிகமாக உணவை எடுத்துக் கொள்வது அல்லது தாமதமாக உணவை சாப்பிடுவது எடை அதிகரிப்பு பிரச்சனையை ஏற்படுத்தலாம். ஆனால், இரவு உணவை 7 மணிக்கு முன்னதாக எடுத்துக் கொள்வது உடல் எடையிழப்பை ஆதரிக்கிறது
செரிமான ஆரோக்கியத்திற்கு
இரவு உணவை முன்னதாகவே எடுத்துக் கொள்வது செரிமான அமைப்பு தூங்கும் முன் அதன் பணிகளை முடிக்க உதவுகிறது. இது மலச்சிக்கல், ஆசிட் ரிஃப்ளக்ஸ் போன்ற செரிமான பிரச்சனை ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது
இரத்த சர்க்கரை கட்டுப்பாடு
இரவில் சீக்கிரமாகவே உணவு உண்பது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக, இன்சுலின் எதிர்ப்பு மற்றும் வகை 2 நீரிழிவு நோய் ஆபத்தில் உள்ளவர்களுக்கு மிகவும் நன்மை பயக்கும்
வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்க
இரவில் தாமதமாக சாப்பிடுவது உடலின் வளர்சிதை மாற்ற விகிதத்தைக் குறைக்கலாம். எனவே உடலில் வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்த உணவை நேரமாக உட்கொள்ளலாம்
கவனத்துடன் சாப்பிடுவது
மாலையில் இரவு உணவை உட்கொள்வது கவனத்துடன் உணவு பழக்கங்களை ஊக்குவிக்க உதவுகிறது. இது ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை ஊக்குவிக்கவும், பகுதிக் கட்டுப்பாட்டை எளிதாக்கவும் உதவுகிறது
குறைந்த நாள்பட்ட நோய்கள்
இரவு உணவை 7 மணிக்கு முன்னதாக உட்கொள்வது நீண்ட கால நோய் தடுப்புக்கு உதவுகிறது. இதன் மூலம் நாள்பட்ட இதய நோய், நீரிழிவு நோய் மற்றும் சில வகையான புற்றுநோய் போன்ற நிலைமைகளின் அபாயத்தைக் குறைக்கலாம்