குளிர்காலத்தில் சீதாப்பழம் உட்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்குப் பல்வேறு வகையான நன்மைகளைத் தருகிறது. இதில் குளிர்ந்த காலநிலையில் சீதாப்பழம் உட்கொள்வதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகளைக் காணலாம்
சீதாப்பழத்தில் வைட்டமின் பி6 மற்றும் சி, பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இது உடலுக்குப் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது
செரிமான ஆரோக்கியத்திற்கு
சீதாப்பழத்தில் உணவு நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இது சீரான செரிமானத்தை ஆதரிக்கவும், மலச்சிக்கல்லைத் தடுக்கவும் உதவுகிறது
இதய ஆரோக்கியத்திற்கு
சீதாப்பழம் மக்னீசியம் மற்றும் பொட்டாசியம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாகும். இவை இரத்த அழுத்தத்தை சீராக வைப்பதன் மூலம் இதய செயல்பாட்டை மேம்படுத்துகிறது
எலும்பு ஆரோக்கியத்திற்கு
இதில் உள்ள கால்சியம் மற்றும் மெக்னீசியம் போன்றவை எலும்புகளை வலுப்படுத்துகிறது. மேலும், இது எலும்பு ஆரோக்கியத்திற்கு பங்களிக்கிறது
கண் ஆரோக்கியத்திற்கு
இதில் லுடீன் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது. இவை கண் ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது. இது நல்ல கண் பார்வையை பராமரிக்கவும், கண் தொடர்பான கோளாறுகளைத் தடுக்கவும் உதவுகிறது
மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்த
இதன் வைட்டமின் பி6 ஊட்டச்சத்துக்கள் நரம்பியக்கடத்தியின் செயல்பாட்டிற்கு முக்கிய பங்களிக்கிறது. இவை மன அழுத்தத்தைக் குறைக்கவும், மனநிலையை மேம்படுத்தவும் உதவுகிறது