கறிவேப்பிலையையும் இந்திய உணவையும் பிரித்து பார்க்கவே முடியாது, காலை கறிவேப்பிலையை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் ஏற்படும் நன்மைகளை பார்க்கலாம்.
இது உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றவும், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை எரிக்கவும் உதவுகிறது. இதனால் உடல் எடை குறையும்.
இது மாவுச்சத்தை குளுக்கோஸாக உடைப்பதை மெதுவாக்கும் திறனைக் கொண்டுள்ளது. இதன்மூலம் இரத்தத்தில் சர்க்கரையின் அதிகரிப்பைக் கட்டுப்படுத்துகிறது.
கறிவேப்பிலையில் ஆல்கலாய்டுகள் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இவை செரிமான நொதிகளைத் தூண்ட உதவுகிறது.
கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவுகிறது மற்றும் கொழுப்பு ஆக்ஸிஜனேற்றத்தைத் தடுக்க உதவுகிறது. இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.