வெறும் வயிற்றில் கேரட் உட்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்

By Gowthami Subramani
31 Aug 2024, 08:00 IST

காலையில் வெறும் வயிற்றில் கேரட் சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்குப் பல நன்மைகளைத் தருகிறது. இதில் வெறும் வயிற்றில் கேரட் உட்கொள்வதால் என்னாகும் என்பதைக் காணலாம்

உடல் எடையைக் குறைக்க

கேரட்டில் கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் இருப்பதால் உடல் எடையைக் குறைக்க சிறந்த தேர்வாக அமைகிறது

கண் பார்வை மேம்பாட்டிற்கு

கேரட்டில் உள்ள வைட்டமின் ஏ சத்துக்கள் கண் பார்வை ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. இதனை உணவில் சேர்ப்பது மங்கலான பார்வை போன்ற கண் சார்ந்த பிரச்சனைகளைத் தவிர்க்கிறது

செரிமானத்தை மேம்படுத்த

கேரட்டில் உள்ள நல்ல அளவிலான நைட்ரேட்டுகள் வயிற்றில் உள்ள நச்சு கூறுகளை வெளியேற்ற உதவுகிறது. மேலும் இதன் நார்ச்சத்துக்கள் செரிமானத்தை மேம்படுத்துகிறது

நோயெதிர்ப்புச் சக்தி அதிகரிக்க

கேரட்டில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது. இவை உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், பல்வேறு நோய்த்தொற்றுக்களைத் தவிர்க்கவும் உதவுகிறது

நச்சுக்களை வெளியேற்ற

மாதவிடாயின் போது வெறும் வயிற்றில் கேரட்டை உட்கொள்வது குடல்களை சுத்தப்படுத்த உதவுகிறது. இதன் நார்ச்சத்துக்கள் குடலை சுத்தம் செய்யவும், வயிற்றில் உள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்றவும் உதவுகிறது

சரும ஆரோக்கியத்திற்கு

கேரட்டில் உள்ள வைட்டமின் ஏ சத்துக்கள் சருமத்தை ஆரோக்கியமான வைக்க உதவுகிறது. மேலும் இது உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்களைக் குறைக்க உதவுகிறது