வெறும் வயிற்றில் அவித்த முட்டை சாப்பிடுவது நல்லதா?

By Karthick M
22 Aug 2024, 22:44 IST

முட்டையில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் மற்றும் பண்புகள் இருக்கிறது. பலர் காலையில் வெறும் வயிற்றில் முட்டையை சாப்பிடுவார்கள். இது சரியா, தவறா என பார்க்கலாம்.

முட்டையில் உள்ள புரதம், செலினியம், கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் ஏ, வைட்டமின் பி போன்றவை ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.

முட்டை சாப்பிடுவதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. மூளையை கூர்மைப்படுத்த முட்டை சாப்பிடுவதும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

காலையில் வெறும் வயிற்றில் முட்டை சாப்பிடுவது, நாள் முழுவதும் உற்சாகமாக வைதிருக்க உதவும். காலையில் வெறும் வயிற்றில் சீரான அளவில் முட்டைகளை உட்கொள்வது மிகவும் நன்மை பயக்கும்.

ஆரோக்கியம் தொடர்பான ஏதேனும் கடுமையான பிரச்சனை உள்ளவர்கள் கண்டிப்பாக முட்டையை உட்கொள்ளும் முன் மருத்துவர் ஆலோசனை பெறுவது நல்லது.