ஆப்ரிகாட் பழங்கள் அதிக மற்றும் அதிசய ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாகும். இது பாதாமி என்று குறிப்பிடப்படுகிறது. இதில் தினமும் காலையில் ஆப்ரிகாட் பழங்கள் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகளைக் காணலாம்
உடல் எடையிழப்புக்கு
உலர்ந்த பாதாமி பழங்களில் அதிக கலோரிகள் உள்ளது. ஆனால், இதில் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இதை மிதமான அளவில் எடுத்துக் கொள்வதன் மூலம் உடல் எடையைக் குறைக்கலாம்
செரிமான ஆரோக்கியத்திற்கு
ஆப்ரிகாட் பழங்களில் உள்ள நார்ச்சத்துக்கள் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தி, மலச்சிக்கல் பிரச்சனையைப் போக்க உதவுகிறது
ஆற்றல் ஊக்கியாக
இந்த பழத்தில் இரும்பு மற்றும் மெக்னீசியம் சத்துக்கள் நிறைந்துள்ளது. இதில் இயற்கையான சர்க்கரைகள் உள்ளது. இவை நாள் முழுவதும் உடலை ஆற்றலுடன் வைக்க உதவுகிறது
நாள்பட்ட நோய்களைத் தடுக்க
ஆப்ரிகாட் பழத்தில் வைட்டமின்கள் ஏ, சி மற்றும் ஈ, உள்ள பீட்டா கரோட்டின், லுடீன், ஜீயாக்சாண்டின் போன்றவை உள்ளது. இவை புற்றுநோய் மற்றும் இன்னும் பிற நாள்பட்ட நோய்களைத் தடுக்க உதவுகிறது
கண் ஆரோக்கியத்திற்கு
ஆப்ரிகாட் பழங்களில் வைட்டமின் சி மற்றும் பீட்டா கரோட்டின் நிறைந்துள்ளது. இவை இரண்டுமே கண் பார்வை மேம்படுத்த உதவுகிறது
சரும ஆரோக்கியத்திற்கு
இந்த பழத்தில் உள்ள நார்ச்சத்துக்கள் சுருக்கம் இல்லாத, ஈரப்பதம் மற்றும் மேம்படுத்தப்பட்ட சரும தொனியை வழங்குகிறது. இதில் உள்ள ஏராளமான ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் சருமத்தை ஃப்ரீ ரேடிக்கல்களில் இருந்து பாதுகாப்பதுடன், பளபளப்பாக வைக்கிறது