இஞ்சி மிகவும் சுவையானது மட்டுமல்லாமல் பல்வேறு ஆரோக்கியமான நல்ல பண்புகளைக் கொண்ட உணவுப்பொருளாகும். இது உடல் ஆரோக்கியத்திற்குப் பல நன்மைகளைத் தருகிறது. இதில் தினமும் இஞ்சி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளைக் காணலாம்
எடையிழப்பை ஆதரிக்க
இஞ்சி வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்த உதவுகிறது. இது உடலில் உள்ள கலோரிகளை எரிக்கும் செயல்முறையை துரிதப்படுத்துகிறது
செரிமான ஆரோக்கியத்திற்கு
இஞ்சியில் ஜிஞ்சரால் போன்ற கூறுகள் நிறைந்துள்ளது. இது அஜீரணம், வாயு மற்றும் மலச்சிக்கல் போன்ற பல்வேறு செரிமான பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்க உதவுகிறது
இரத்த ஓட்டத்தை மேம்படுத்த
தினமும் இஞ்சி உட்கொள்வது இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது. இது இதய நோய் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது
நீரிழிவு நோய்க்கு
இஞ்சியில் உள்ள நீரிழிவு எதிர்ப்பு பண்புகள் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. எனவே இது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகுந்த நன்மை பயக்கும்
வலுவான நோய் எதிர்ப்பு சக்திக்கு
இஞ்சியில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளது. இது உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை மேம்படுத்தி, உடலை தொற்று நோய்களில் இருந்து பாதுகாக்க உதவுகிறது
மூட்டு வலி ஆரோக்கியத்திற்கு
இஞ்சியில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளது. இது மூட்டு வலி மற்றும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது
சரும ஆரோக்கியத்திற்கு
இஞ்சியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் சருமத்தை பளபளப்பாக மற்றும் ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது