தினமும் ஒரு கைப்பிடி அளவு சூரியகாந்தி விதை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

By Gowthami Subramani
07 Jan 2025, 16:21 IST

தினமும் சூரியகாந்தி விதைகளை உட்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்குப் பல்வேறு நன்மைகளைத் தருகிறது. இதில் தினந்தோறும் ஒரு கைப்பிடி அளவு சூரியகாந்தி விதை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளைக் காணலாம்

எடை இழப்பை ஆதரிக்க

சூரியகாந்தி விதைகளில் புரதம் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இது வயிறு நிரம்பிய முழுமை உணர்வைத் தருவதால் தேவையில்லாமல் சாப்பிடுவதைத் தடுக்கிறது. இதன் மூலம் உடல் எடையைக் குறைக்கலாம்

செரிமான ஆரோக்கியத்திற்கு

சூரியகாந்தி விதைகளில் அதிகளவு நார்ச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. இது செரிமான ஆரோக்கியத்திற்கு உதவுகிறது

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க

சூரியகாந்தி விதைகளில் செலினியம், துத்தநாகம் போன்றவை உள்ளது. இது உடலை தொற்று நோய்களிலிருந்து பாதுகாக்க உதவுகிறது

எலும்பு ஆரோக்கியத்திற்கு

இந்த விதைகளில் மெக்னீசியம், கால்சியம் மற்றும் தாமிரம் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளது. இது எலும்புகளுக்கு மிகவும் நன்மை பயக்கும்

கண் ஆரோக்கியத்திற்கு

இதில் வைட்டமின் ஈ மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளது. இது ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் மற்றும் வயது தொடர்பான மாகுலர் சிதைவிலிருந்து கண்களைப் பாதுகாக்க உதவுகிறது

சரும ஆரோக்கியத்திற்கு

சூரியகாந்தி விதைகளில் வைட்டமின் ஈ உள்ளது. இது சருமத்தைப் பிரகாசமாக வைப்பதுடன், சூரியக் கதிர்களால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து பாதுகாக்கவும் உதவுகிறது

எப்படி எடுத்துக் கொள்ளலாம்?

சூரியகாந்தி விதைகளை இயற்கையாக அப்படியே எடுத்துக் கொள்ளலாம். இது தவிர சாலட், பழம், தயிர் போன்றவற்றில் சேர்த்தும் சாப்பிடலாம்