காலையில் வெறும் வயிற்றில் இரண்டு வாழைப்பழங்களை சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்குப் பல்வேறு நன்மைகளைத் தருகிறது
எடை அதிகரிப்புக்கு
உடல் எடையை அதிகரிக்க விரும்புபவர்களுக்கு வாழைப்பழம் சிறந்த தேர்வாகும். தினமும் வாழைப்பழம் சாப்பிட்டு பால் அருந்தி வர விரைவில் பலன் பெறலாம்
இதய ஆரோக்கியத்திற்கு
வாழைப்பழம் பொட்டாசியம் நிறைந்ததாகும். இது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தி, இதயத்தை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது
செரிமான ஆரோக்கியத்திற்கு
வாழைப்பழத்தை வெறும் வயிற்றில் உட்கொள்வது குடல்கள் வலுவடைந்து செரிமான ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது. இது மலச்சிக்கல்லில் இருந்து நிவாரணம் தருகிறது
இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டிற்கு
வெறும் வயிற்றில் வாழைப்பழத்தை சாப்பிடுவதன் மூலம் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும். இதனுடன், இது பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது
எலும்பு ஆரோக்கியம்
வாழைப்பழத்தில் கால்சியம் மற்றும் மக்னீசியம் சத்துக்கள் உள்ளது. இது எலும்புகளின் வலிமைக்கு அவசியமாகும்
உடனடி ஆற்றல் தர
வாழைப்பழத்தில் குளுக்கோஸ் உள்ளது. இதனை உட்கொள்வதால் உடலுக்கு உடனடி ஆற்றலைத் தருகிறது. எனவே தான் விரதத்தின் போது வாழைப்பழத்தை சாப்பிடுவர்