கோதுமை புல் சாறு ஏராளமான நன்மைகளை கொண்ட ஊட்டச்சத்துக்களின் கலவையாகும். இதில் பல்வேறு வகையான வைட்டமின்கள், அத்தியாவசிய அமினோ அமிலங்கள், இரும்புச்சத்து, துத்தநாகம், மெக்னீசியம் போன்ற ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளது
எடையைக் குறைக்க
கோதுமை புல் சாற்றில் செலினியம் எனும் கனிமம் உள்ளது. இது உடல் எடையைப் பராமரிக்க உதவுகிறது. இந்த சாற்றில் உள்ள ஊட்டச்சத்துக்கள் அதிகப்படியான பசி மற்றும் உணவு உட்கொள்ளலை கட்டுப்படுத்துகிறது
கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க
கோதுமைப் புல் சாறு அருந்துவது உடலில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகிறது. இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உணவில் உள்ள கொலஸ்ட்ரால் உறிஞ்சுதலைக் குறைக்க உதவுகிறது
சுவாச ஆரோக்கியத்திற்கு
கோதுமைப் புல் சாற்றை குடிப்பது சுவாச ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதை குடித்து வருவதன் மூலம் சளி, ஆஸ்துமா, மூச்சுக்குழாய் அழற்சி போன்ற நோய்களின் அறிகுறிகளை குறைக்கிறது
செரிமான ஆரோக்கியத்திற்கு
கோதுமைப் புல்லில் நிறைந்துள்ள என்சைம்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இது வாயு, வயிற்று உப்புசம், மலச்சிக்கல் போன்ற செரிமான பிரச்சனைகளைத் தடுக்க உதவுகிறது
வீக்கத்தைக் குறைக்க
இதில் நார்ச்சத்து, குளோரோபில், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் போன்றவை உள்ளது. இதன் அழற்சி எதிர்ப்பு பண்புகள் வலி மற்றும் இரத்தப்போக்கைக் குறைக்க உதவுகிறது. மேலும் இது காயத்தை குணப்படுத்துகிறது
தலைமுடி ஆரோக்கியத்திற்கு
முடி உதிர்தல், கரடுமுரடான முடி போன்ற பல்வேறு முடி சார்ந்த பிரச்சனைகளிலிருந்து மீண்டு வருவதற்கு இந்த ஆரோக்கிய பானத்தை அருந்தலாம். இது ஆன்டி ஆக்ஸிடன்ட்களின் சிறந்த ஆதாரமாகும். இது முதுமை செயல்முறையை தாமதப்படுத்தவும், நரை முடியைத் தடுக்கவும் உதவுகிறது