ஆயுர்வேதத்தில் மஞ்சள், தேன் இரண்டுமே முக்கிய பங்கு வகிக்கிறது. மஞ்சள் தேன் கலந்த கலவையை உட்கொள்வதால் தரும் நன்மைகளைக் காணலாம்.
அழற்சி எதிர்ப்புப் பண்புகள்
மஞ்சள் மற்றும் தேன் கலவை கீல்வாதம் போன்ற வீக்கத்தால் ஏற்படும் நோய்களின் அறிகுறிகளை விடுவிக்கவும் உதவுகிறது. மூட்டு ஆரோக்கியம் அதிகரிக்கவும் இது உதவும்.
செரிமான ஆரோக்கியம்
தேன் மற்றும் மஞ்சள் இரண்டுமே சிறந்த செரிமான பொருள்கள் ஆகும். இது உடலில் உள்ள கொழுப்புகளை எளிதில் செரிமானம் அடையச் செய்வகிறது.
இதய ஆரோக்கியம்
மஞ்சள் இரத்த நாளங்களில் கொழுப்பைக் குறைப்பதோடு இதய ஆரோக்கியத்திற்கு உதவும். தேன் இரத்த ஓட்டத்தில் உள்ள ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை எதிர்த்துப் போராட உதவுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தி
மஞ்சள் மற்றும் தேனுடன் கலந்த கலவையானது உடலில் நோயெதிர்ப்பு மண்டலத்தை அதிகரிக்கக் கூடிய ஒரு சக்திவாய்ந்த ஊக்கத்தை அளிக்கிறது.