குளிர்காலத்தில் மஞ்சள் கலந்த பால் அருந்துவது பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. இதற்கு இதில் குர்குமின் என்ற சக்திவாய்ந்த கலவை, ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் போன்றவை நிறைந்திருப்பதே ஆகும்
எடையிழப்புக்கு
மஞ்சள் பாலில் உள்ள குர்குமின் கொழுப்பு திரட்சியைக் குறைக்கவும், வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தவும், கொழுப்பை எரிக்கும் செயல்முறைகளை அதிகரித்து, உடலில் கொழுப்புச் சேமிப்பைக் குறைப்பதன் மூலம் உடல் எடையிழப்பை ஆதரிக்கிறது
செரிமான ஆரோக்கியத்திற்கு
மஞ்சள் பால் அருந்துவது செரிமான அமைப்பை மேம்படுத்தி, வீக்கத்தைக் குறைக்கிறது. மேலும், பித்த உற்பத்தியை தூண்டி, வீக்கத்தைக் குறைப்பதன் மூலம்ஆரோக்கியமான குடல் செயல்பாட்டை ஊக்குவிக்கிறது
இரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்க
மஞ்சள் பால் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. எனவே இது நீரிழிவு நோயாளிகள் அல்லது ஆபத்தில் உள்ளவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்
மூட்டு வலியை நீக்க
மஞ்சளில் உள்ள சக்திவாய்ந்த அழற்சி எதிர்ப்புப் பண்புகள் கீல்வாதம், மூட்டு வலி மற்றும் தசை விறைப்பு போன்ற அறிகுறிகளை நிர்வகிக்க உதவுகிறது
மூளை செயல்பாட்டை ஆதரிக்க
மஞ்சளில் உள்ள குர்குமின் மேம்பட்ட அறிவாற்றல் செயல்பாடு மற்றும் அல்சைமர் நோய் போன்ற மூளை நிலைகளின் அறிகுறிகளைக் குறைக்கிறது. மேலும் கவனத்தை அதிகரிக்கிறது