நைட்ல மஞ்சள் பால் குடிப்பதில் இத்தனை நன்மைகளா?

By Gowthami Subramani
22 Jan 2024, 15:10 IST

பாலில் மஞ்சள் சேர்த்து இரவு உறங்கும் முன்னதாக குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு பல்வேறு நன்மைகளைத் தரலாம்

மேம்படுத்தப்பட்ட தூக்கத்தின் தரம்

மஞ்சளில் குர்குமின் என்ற கலவை உள்ளது. மேலும் இதன் ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் தூக்கத்தின் தரத்தை மேம்படுஹ்ட்த உதவுகிறது

மூட்டு வலி பிரச்சனைக்கு

இதன் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் கீல்வாதம் மற்றும் மூட்டு வலி போன்றவற்றில் இருந்து நிவாரணம் அளிக்கிறது. இது அசௌகரியத்தை நீக்க உதவுகிறது

நோயெதிர்ப்புச் சக்தி அதிகரிக்க

மஞ்சள் கலந்த பால் அருந்துவது உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இது பல்வேறு நோய்களுக்கு எதிராக செயல்பட உதவும் ஆற்றலைத் தருகிறது

வீக்கத்தைக் குறைக்க

மஞ்சளில் உள்ள அழற்சி எதிர்ப்புப் பண்புகள் வீக்கத்தைக் குறைக்கவும், உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது

மேம்பட்ட செரிமானத்திற்கு

மஞ்சள் செரிமானத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். எனவே மஞ்சள் கலந்த பாலை இரவு நேரத்தில் குடிப்பது செரிமான ஆற்றலை மேம்படுத்த உதவுகிறது

இரவில் மஞ்சள் பால் அருந்துவது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். எனினும் வேறு ஏதேனும் நோயால் பாதிக்கப்பட்டிருப்பின் இரவில் மஞ்சள் பால் எடுத்துக் கொள்ளும் முன் மருத்துவரை அணுகுவது நல்லது