தினமும் வெறும் வயிற்றில் துளசி வாட்டர் குடிப்பது என்னாவது நல்லது தெரியுமா?

By Devaki Jeganathan
29 Apr 2025, 01:09 IST

இந்து மதத்தில் துளசி மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. இது ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது. இதன் சாற்றை தினமும் குடிப்பதால் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். அதை பற்றி இங்கே பார்க்கலாம்.

உடலை டிடாக்ஸ் செய்யும்

வயிற்றில் தேவையற்ற அமிலத்தன்மை இருந்தால், அதை சரி செய்ய தினமும் காலையில் துளசி இலை சாறு குடித்து வந்தால் மிகவும் நல்லது. இது உடலில் உள்ள நச்சை எளிமையாக வெளியேற்றும்.

சளி - காய்ச்சளுக்கு

காய்ச்சல், ஜலதோஷம் மற்றும் சளி பிரச்சனை உள்ளவர்கள் துளசி சாற்றை தினமும் குடித்து வந்தால், சிறந்த நிவாரணம் கிடைக்கும்.

நீரிழிவு நோய்

நீரிழிவு நோய்க்கும் துளசி நீர் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதில் உள்ள அமிலங்கள் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கும்.

நோய் எதிர்ப்பு சக்தி

துளசி நீரை தினமும் குடிப்பதால் உடலில் உள்ள நச்சுப் பொருட்கள் வெளியேறி நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது.

மன அழுத்தம்

மனஅழுத்தம் பிற்காலத்தில் பல கடுமையான நோய்களை உண்டாக்கும். நாம் தினமும் குடிக்கும் சூடான பானங்களில் துளசி இலையை சேர்த்தால் மனா அழுத்தம் நீங்கும்.

எடை குறைப்பு

துளசி இலையை சாறு செய்து குடித்து வந்தால் உடல் எடையை எளிமையாக குறைக்கலாம். இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உடல் எடையை குறைக்க உதவுகிறது.

புற்றுநோய் எதிர்ப்பு

துளசியில் உள்ள பைட்டோ கெமிக்கல்கள் வலுவான ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டுள்ளன. இதனால், அவை தோல், கல்லீரல், வாய் மற்றும் நுரையீரல் புற்றுநோய்களில் இருந்து நம்மைப் பாதுகாக்க உதவுகின்றன.