வெறும் வயிற்றில் துளசி டீ குடிப்பதன் நன்மைகள்!

By Devaki Jeganathan
24 Sep 2024, 11:21 IST

துளசி இயற்கையாவே பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டது. இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, கால்சியம், துத்தநாகம், இரும்புச்சத்து, குளோரோபில், நார்ச்சத்து போன்றவை ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. தினமும் வெறும் வயிற்றில் துளசி டீ குடிப்பதன் நன்மைகள் இங்கே.

நோய் எதிர்ப்பு சக்தி

துளசி டீ குடிப்பது நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த பெரிதும் உதவுகிறது. துளசியில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஆண்டிமைக்ரோபியல் பண்புகள் உள்ளன. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது மற்றும் தொற்றுநோயை எதிர்த்துப் போராட உதவுகிறது.

சிறந்த செரிமானம்

இதனை தினமும் குடிப்பதால் வயிற்று உப்புசம், வாயு மற்றும் அஜீரணம் போன்ற பிரச்சனைகள் குறையும். அதுமட்டுமின்றி இதனை குடிப்பதால் குடலின் pH அளவு சீராக இருப்பதோடு, மலச்சிக்கல் பிரச்சனையும் நீங்கும்.

சளி மற்றும் இருமலில்

மாறிவரும் காலநிலையால் ஏற்படும் சளி மற்றும் இருமல் பிரச்சனையில் இருந்தும் துளசி டீ குடிப்பதால் நிவாரணம் கிடைக்கும். இதனால், இருமலிலிருந்தும் நிவாரணம் பெறலாம்.

சர்க்கரை நோய்

துளசி தேநீர் குடிப்பதால் இன்சுலின் உணர்திறன் அதிகரிக்கிறது. இது செல்கள் இன்சுலினை சிறப்பாக பயன்படுத்த உதவுகிறது. நீரிழிவு நோயாளிகளுக்கு துளசி தேநீர் பயனுள்ளதாக இருக்கும்.

இதய ஆரோக்கியம்

துளசி டீ குடிப்பதால் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருப்பதுடன் கொலஸ்ட்ரால் அளவும் குறைகிறது. மேலும், இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஆக்ஸிஜனேற்ற சேதத்தை குறைக்கின்றன. இது இதய நோய்களைத் தடுக்க உதவுகிறது.

தோலுக்கு நல்லது

ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் துளசி தேநீரில் காணப்படுகின்றன. இது சருமத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். ஆன்டிஆக்ஸிடன்ட்கள் வயதான அறிகுறிகளைக் குறைக்க உதவுகின்றன.

எடை குறையும்

வெறும் வயிற்றில் துளசி டீ குடிப்பதால் உடலின் வளர்சிதை மாற்ற விகிதம் அதிகரிக்கிறது. இதனை உட்கொள்வதன் மூலம் உடல் எடையை குறைக்கவும் முடியும்.