குளிர்ந்த காலநிலையில் ஊறவைத்த அத்திப்பழத் தண்ணீரை குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்குப் பல்வேறு நன்மைகளைத் தருகிறது. இதில் குளிர்காலத்தில் ஊறவைத்த அத்திப்பழ நீரைக் குடிப்பதன் நன்மைகளைக் காணலாம்
எடை இழப்பை ஊக்குவிக்க
அத்திப்பழத்தில் குறைந்த கலோரிகள், அதிக நார்ச்சத்துக்கள் உள்ளது. ஊறவைத்த அஞ்சீர் தண்ணீரை உட்கொள்வது பசியைக் கட்டுப்படுத்தி எடையைக் கட்டுப்படுத்துகிறது
செரிமான ஆரோக்கியத்திற்கு
அத்திப்பழத்தில் அதிக நார்ச்சத்துக்கள் உள்ளது. இது சீரான செரிமானத்தை ஆதரிக்கவும், மலச்சிக்கலைத் தடுக்கவும் உதவுகிறது. இவையிரண்டுமே பொதுவான குளிர்கால பிரச்சினையாகும்
இரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்க
அத்திப்பழம் இரத்த சர்க்கரை அளவை சீராக பராமரிக்க உதவுகிறது. குறிப்பாக, இது நீரிழிவு நோயை நிர்வகிப்பவர்களுக்கு சிறந்த தேர்வாக அமைகிறது
இதய ஆரோக்கியத்திற்கு
ஊறவைத்த அஞ்சீர் தண்ணீரில் பொட்டாசியம் ஊட்டச்சத்துக்கள் உள்ளது. இது இரத்த அழுத்தத்தை சீராக வைக்க உதவுகிறது. இதன் மூலம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க
இதில் இயற்கையாகவே அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. ஊறவைத்த அஞ்சீர் தண்ணீர் அருந்துவது நோயெதிர்ப்புச் சக்தியை மேம்படுத்தவும், குளிர்கால சளியை எதிர்த்துப் போராடவும் உதவுகிறது
எலும்பு வலிமையை ஆதரிக்க
அஞ்சீர் தண்ணீரில் கால்சியம் மற்றும் மெக்னீசியம் உள்ளது. இது குளிர்காலத்தில் எலும்புகளை வலுப்படுத்துவதற்கு உதவுகிறது
சரும ஆரோக்கியத்திற்கு
சருமத்தை ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் வைப்பதற்கு அஞ்சீர் தண்ணீர் உதவுகிறது. இதில் உள்ள வைட்டமின்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் சருமத்திற்கு ஊட்டமளித்து, குளிர்ந்த காலநிலையிலும் பொலிவைத் தருகிறது