தினமும் ரோஸ்மேரி தண்ணீர் குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்குப் பல்வேறு நன்மைகளைத் தருகிறது. இதில் ரோஸ்மேரி வாட்டர் தரும் நன்மைகளைக் காணலாம்
செரிமான ஆரோக்கியத்திற்கு
ரோஸ்மேரி தண்ணீர் ஆனது பித்த ஓட்டத்தைத் தூண்டவும், அஜீரணத்தை எளிதாக்கவும் உதவுகிறது. இதன் மூலம் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் குறைய
ரோஸ்மேரி அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் கொண்டதாகும். மேலும் இதில் கார்னோசிக் அமிலம் மற்றும் ரோஸ்மரினிக் அமிலம் உள்ளது. இது வீக்கம் மற்றும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது
நோயெதிர்ப்புச் சக்தி அதிகரிக்க
ரோஸ்மேரியில் பாக்டீரியா எதிர்ப்பு, வைரஸ் எதிர்ப்பு மற்றும் பூஞ்சை காளான் பண்புகள் உள்ளது. இவை உடலில் நோயெதிர்ப்பு அமைப்பை மேம்படுத்தவும், நோய்த்தொற்றுக்களிய எதிர்த்துப் போராடவும் உதவுகிறது
கண்பார்வை மேம்பாட்டிற்கு
ரோஸ்மேரி நீரில் உள்ள ஆக்ஸிஜனேற்றங்கள் கண்பார்வை மற்றும் கண்களின் ஆரோக்கியத்தை ஆதரிக்க உதவுகிறது
முடி வளர்ச்சிக்கு
அழற்சி எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் காரணமாக ரோஸ்மேரி தண்ணீர் முடி மற்றும் உச்சந்தலை ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
அறிவாற்றல் மேம்பாட்டிற்கு
ரோஸ்மேரி அறிவாற்றல் செயல்பாட்டை அதிகரிக்க உதவுகிறது. மேலும், இது வயதாவதால் ஏற்படும் நினைவாற்றல் இழப்பைத் தடுக்கிறது
மன அழுத்தம் குறைய
ரோஸ்மேரி வாட்டர் குடிப்பது மன அழுத்தம் மற்றும் பதட்டத்தைப் போக்குவதாகக் கூறப்படுகிறது. எனவே தான் மன அழுத்தம், பதட்டம் உள்ளவர்களுக்கு ரோஸ்மேரி டீ குடிக்க பரிந்துரைக்கப்படுகிறது