இரவு தூங்கும் முன் ஜாதிக்காய் தண்ணீர் குடிப்பதன் நன்மைகள்!

By Devaki Jeganathan
05 Sep 2024, 12:32 IST

ஜாதிக்காய் பல நூற்றாண்டுகளாக பல பிரச்சனைகளுக்கு தீர்வாக பயன்படுத்தப்படுகிறது. கால்சியம், இரும்பு மற்றும் மாங்கனீஸ் போன்ற பண்புகள் நிறைந்த ஜாதிக்காய் நீரை இரவில் உட்கொள்வது மிகவும் நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. தூங்கும் முன் ஜாதிக்காய் தண்ணீரை குடித்தால் என்ன நடக்கும் என பார்க்கலாம்.

இரத்த அழுத்தம்

ஜாதிக்காயில் பொட்டாசியம் நிறைந்துள்ளது. இது இரத்த நாளங்களை விரிவுபடுத்த உதவுகிறது. இதனால், இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது. இரவில் தூங்கும் முன் அதன் நீரை அருந்துவது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

மூளை ஆரோக்கியம்

ஜாதிக்காயில் இருக்கும் மிரிஸ்டிசின் மற்றும் மைசலின் போன்ற அத்தியாவசிய எண்ணெய்கள் அவற்றின் நரம்பியல் பண்புகளுக்கு பெயர் பெற்றவை. இரவில் அதன் தண்ணீரை குடிப்பதால் நினைவாற்றல் அதிகரிக்கிறது.

சிறந்த செரிமானம்

இது செரிமான நொதிகளைத் தூண்டுகிறது. இது உணவை ஜீரணிக்க உதவுகிறது. இந்த தண்ணீரை உட்கொள்வதால் வாயு, அமிலத்தன்மை மற்றும் மலச்சிக்கல் ஆகியவற்றில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

வாய் ஆரோக்கியம்

இதில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் வாய்வழி தொற்று மற்றும் வாய் துர்நாற்றத்தை சமாளிக்க உதவும்.

சிறந்த தூக்கம்

இதில் உள்ள மிரிஸ்டிசின் மற்றும் மெக்னீசியம் போன்ற கலவைகள் தூக்கத்தின் தரத்தை மேம்படுத்துகின்றன. இந்நிலையில், தூக்கமின்மையால் அவதிப்படுபவர்களுக்கு தூங்கும் முன் ஜாதிக்காய் தண்ணீரை குடிப்பது நன்மை பயக்கும்.

நோய் எதிர்ப்பு சக்தி

ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த ஜாதிக்காய் நீர் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை வளர்க்க உதவுகிறது. இதனை உட்கொள்வதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

தோல் ஆரோக்கியம்

ஜாதிக்காயில் உள்ள நுண்ணுயிர் எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் சருமத்திற்கு நன்மை பயக்கும். ஜாதிக்காய் தண்ணீரை தொடர்ந்து குடிப்பது முகப்பரு மற்றும் தழும்புகளை குறைக்க உதவுகிறது.