கோடையில் ஆட்டுக்கால் சூப் குடிப்பதால் உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை அறிந்துக் கொள்ளுங்கள்.
எலும்புகளிலிருந்து தயாரிக்கப்படும் இந்த சூப்பில் கலோரிகள் மிகக் குறைவு. இது பசியை கட்டுப்படுத்தி எடையை குறைக்க உதவுகிறது.
மட்டன் பாயா சூப் குடிப்பதால் உடலில் உள்ள வீக்கத்தைக் குறைக்கலாம். எலும்புக் குழம்பில் உள்ள அமினோ அமிலங்கள் வீக்கத்தைக் குறைப்பதில் உதவியாக இருக்கும்.
பாயா சூப்பில் அமினோ அமிலங்கள் நிறைந்துள்ளது. உணவுகளில் அமினோ அமிலங்கள் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
பாயா சூப் கர்ப்பிணிப் பெண்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதனை உட்கொள்வதால், எலும்புகள், செரிமான அமைப்பு மற்றும் கரு நன்றாக வளரும்.
பாயா சூப்பில் கால்சியம், புரதம், மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், துத்தநாகம், மாங்கனீஸ் மற்றும் வைட்டமின் டி போன்ற தனிமங்கள் நிறைந்துள்ளன.