ஜப்பானிய மக்களின் ரகசியம்! மட்சா கிரீன் டீ தரும் அற்புத நன்மைகள்

By Gowthami Subramani
03 Jun 2024, 13:30 IST

சிறப்பாக வளர்க்கப்பட்டு பதப்படுத்தப்பட்ட பச்சை தேயிலை இலைகளில் இருந்து தயாரிக்கப்படும் மட்சா கிரீன் டீ பவுடர் தனித்துவமான சுவையுடன் கூடிய ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்களையும் அளிக்கிறது

எடை இழப்புக்கு

மட்சா கிரீன் டீ உடல் எடை இழப்புக்கு சிறந்த தேர்வாக அமைகிறது. இதில் உள்ள கேடசின்கள் மற்றும் காஃபின் கலவையானது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், உடல் எடையைக் குறைக்கவும் உதவுகிறது

இதய ஆரோக்கியத்திற்கு

மேட்சா கிரீன் டீயை தவறாமல் உட்கொள்வது இதய ஆரோக்கியத்தில் பங்களிக்கிறது. இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் கெட்ட கொழுப்புகளைக் குறைத்து, ஆக்ஸிஜனேற்றத்தைத் தடுக்கிறது

உடல் நச்சுக்களை நீக்க

இந்த இலைகளில் குளோரோபில் உள்ளடக்கம் அதிகம் உள்ளது. இந்த குளோரோபில் ஒரு சக்திவாய்ந்த நச்சு நீக்கியாகும். இது உடலின் இயற்கையான நச்சுத்தன்மை செயல்முறைகளை மேம்படுத்தி, ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது

நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்க

மட்சா கிரீன் டீயில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளது. இது வலுவான நோய் எதிர்ப்பு சக்தியை ஆதரிக்கிறது. இவை உடலில் தொற்று மற்றும் வைரஸ்களை எதிர்த்துப் போராட உதவுகிறது

வீக்கத்தைக் குறைக்க

மட்சா க்ரீன் டீயில் நிறைந்துள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் குறிப்பாக, கேட்டசின்கள் செல் சேதத்தைத் தடுக்கவும், வீக்கத்தியக் குறைக்கவும் உதவுகிறது. மேலும் இந்த கூறுகள் இதய நோய், புற்றுநோய் போன்ற நாள்பட்ட நோய்களிலிருந்து பாதுகாக்கவும் உதவுகிறது

மன அமைதியை மேம்படுத்த

மட்சா க்ரீன் டீயில் அமினோ அமிலமான எல்-தியானின் அதிகளவு நிறைந்துள்ளது. இந்த எல்-தியானின் மூளையில் ஆல்பா அலைகளின் உற்பத்தியை அதிகரித்து, தளர்வான மனநிலையைத் தருகிறது. மேலும் இது அறிவாற்றல் செயல்பாட்டை மேம்படுத்த உதவும் சிறந்த பானமாகும்