தாமரை இலை டீயின் ஆரோக்கிய நன்மைகள்

By Ishvarya Gurumurthy G
30 Sep 2024, 12:42 IST

தாமரை இலைகள் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். தாமரை இலை டீ குடிபபது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா?

தாமரை இலை டீ குடிப்பதன் நன்மைகள்

தாமரை இலை டீ குடிப்பது உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும். இதன் மூலம் பல வகையான சிறிய மற்றும் பெரிய பிரச்னைகளில் இருந்து உடலை காப்பாற்ற முடியும். இதன் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்வோம்.

வலியிலிருந்து நிவாரணம்

தாமரை டீ குடிப்பதன் மூலம் உடல் வலியிலிருந்து நிவாரணம் பெறலாம். இது வீக்கத்தையும் குறைக்கிறது. தாமரை இலையில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் வலியிலிருந்து நிவாரணம் அளிக்கிறது.

மன அழுத்தம் குறையும்

தாமரை டீ குடிப்பதன் மூலம் மன அழுத்தம் மற்றும் பதட்டம் தடுக்கப்படும். இந்த பூவில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உங்களை நிம்மதியாக உணரவைக்கும்.

ஆற்றல் அதிகரிப்பு

நீங்கள் மிகவும் சோர்வாக உணர்ந்தால், தாமரை டீ குடிப்பது நன்மை பயக்கும். இது உடலில் ஆற்றல் மட்டத்தை அதிகரிக்கிறது.

இரத்த அழுத்தம் கட்டுப்படும்

தாமரை டீ குடிப்பதால் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது. இதன் மூலம் உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கலாம். இருப்பினும், டீ அருந்தும் முன் மருத்துவரை அணுகவும்.

நினைவு கூர்மையாக மாறும்

நினைவாற்றலைக் கூர்மைப்படுத்த வேண்டுமானால் தாமரை தேநீர் அருந்தலாம். இதனால் உங்கள் மனதை சுறுசுறுப்பாக வைத்திருக்க முடியும்.