அடிக்கிற வெயிலுக்கு ஒரு கிளாஸ் கம்மங்கூழ் குடிப்பதில் இத்தனை நன்மைகளா?

By Gowthami Subramani
05 May 2025, 17:52 IST

கோடை வெப்பம் பலருக்கும் அசௌகரியத்தைத் தரக்கூடியதாகும். வெயிலின் தாக்கத்தைத் தணிக்க இயற்கையாகவே உதவும் பானங்களில் ஒன்று கம்மங்கூழ் ஆகும். இதில் கோடைக்காலத்தில் கம்மங்கூழ் அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் சிலவற்றைக் காணலாம்

ஊட்டச்சத்துக்கள்

கம்பு கூழ் செய்யத் தேவைப்படும் கம்புவில் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ், வைட்டமின் ஈ, புரோட்டீன் நியாசின், தையமின், ரிபோஃப்ளேவின், மக்னீசியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, பொட்டாசியம் மற்றும் அதிகளவிலான நார்ச்சத்துக்கள் காணப்படுகின்றன

உடல் சூடு குறைய

கம்மங்கூழை தினமும் காலையில் சாப்பிட்டு வருவதன் மூலம் உடலின் வெப்பநிலை அளவுக்கு அதிகமாகாமல் சீராக பராமரிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. மேலும் இதை அருந்துவது உடலுக்கு உடனடி ஆற்றலை வழங்குகிறது

உடல் எடை குறைய

கம்மங்கூழில் உள்ள ட்ரிப்டோஃபேன் என்னும் அமினோ அமிலம், பசியுணர்வைக் குறைத்து, உடல் எடையைப் பராமரிக்க உதவுகிறது. மேலும் இது செரிமானத்தை மெதுவாக்குவதால், நீண்ட நேரம் பசி எடுக்காமல் தடுக்க வழிவகுக்கிறது

உயர் இரத்த அழுத்தத்திற்கு

கம்புவில் உள்ள மக்னீசியம், தசைகளைத் தளர்வடையச் செய்கிறது. அதாவது, இரத்த நாள சுவற்றை தளர்வடையச் செய்து, இரத்த ஓட்டத்தில் ஏற்படும் தடையைத் தடுக்கிறது. இதன் மூலம் உயர் இரத்த அழுத்தம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கலாம்

இதய நோய்க்கு

தினமும் கம்மங்கூழ் குடிப்பது உடலில் உள்ள ட்ரைகிளிசரைடுகளின் அளவைக் குறைக்க உதவுகிறது. இது இரத்தத்தின் அடர்த்தியை அதிகரித்து, இரத்தம் உறைவதைத் தடுக்கிறது. இதன் மூலம் பக்கவாதம் மற்றும் கரோனரி இதய நோய் அபாயத்தைக் குறைக்கலாம்

நீரிழிவு நோய்க்கு

இதில் குறைந்த கிளைசெமிக் குறியீடு உள்ளது. எனவே இது செரிமான செயல்பாட்டை தாமதப்படுத்தி, இரத்த சர்க்கரை அளவை சீராகப் பராமரிக்கிறது. நீரிழிவு நோயாளிகள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைக்க, கம்மங்கூழைக் குடிக்கலாம்

இரத்த சோகை நீங்க

கம்புவில் அதிகளவு இரும்புச்சத்துக்கள் உள்ளது. இது இரத்த செல்களின் உற்பத்திக்கு அவசியமாகும். ஒருவர் தினமும் கம்பு கூழ் குடித்து வருவது இரத்த சோகையை சரி செய்ய உதவுகிறது. மேலும் உடலில் இரத்தத்தின் அளவை அதிகரிக்க விரும்புபவர்கள் தினமும் கம்மங்கூழை குடிக்கலாம்

நல்ல தூக்கத்திற்கு

கம்புவில் உள்ள ட்ரிப்டோஃபேன் உடலில் செரடோனின் அளவை அதிகரித்து, மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. எனவே ஒருவர் தினமும் இரவில் படுக்கும் முன் ஒரு டம்ளர் கம்பங்கூழ் குடிப்பதன் மூலம் மன அழுத்தத்தைக் குறைத்து, இரவில் நிம்மதியான ஆழ்ந்த தூக்கத்தைப் பெறலாம்.