மலச்சிக்கலுக்கு உடனடி நிவாரணம்... சீரகத் தண்ணீருடன் இதைக் கலந்து குடிங்க...!

By Kanimozhi Pannerselvam
28 Mar 2025, 10:22 IST

செரிமானத்தை மேம்படுத்தும்

சப்ஜா விதைகள் மற்றும் சீரகம் இரண்டும் செரிமானத்தை மேம்படுத்துகின்றன, அஜீரணம், வாயு, வீக்கம் போன்ற பிரச்சனைகளைத் தடுக்கின்றன.

மலச்சிக்கலைத் தீர்க்கும்

சப்ஜா விதைகள் மற்றும் சீரகம் இரண்டும் குடலைச் சுத்தப்படுத்தி, மலச்சிக்கலைத் தீர்க்கவும், குடல் இயக்கத்தை ஒழுங்குபடுத்தவும் உதவுகின்றன.

ஹைட்ரேஷனை அதிகரிக்கும்

சப்ஜா விதைகள் அதிகமாக தண்ணீரை உறிஞ்சிக் கொள்ளும் தன்மை கொண்டவை. இது உடலை கோடை காலத்தில் நீரேற்றத்துடன் வைத்திருக்க உதவும்.

எடை இழப்புக்கு உதவும்

சப்ஜா விதைகள் கலோரி குறைவாகவும், ஃபைபர் சத்தாலும் நிறைந்தது, இது பசியை கட்டுப்படுத்தி, உடல் எடையை குறைக்க உதவுகிறது.

நச்சுகளை வெளியேற்றும்

சப்ஜா விதைகள் உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றி, உடலை சுத்தமாக வைத்திருக்க உதவுகிறது.

இதயத்திற்கு நல்லது

சப்ஜா விதைகளில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன, இது இதய ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது மற்றும் வீக்கத்தைக் குறைக்கிறது.

எலும்புகளை வலுவாக்குகிறது

சப்ஜா விதைகளில் கால்சியம், மெக்னீசியம் மற்றும் இரும்பு போன்ற தாதுக்கள் உள்ளன, இது எலும்புகளை வலுவாக்குகிறது.

தோல் மற்றும் முடிக்கு நல்லது

சப்ஜா விதைகளில் வைட்டமின்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன, இது தோல் மற்றும் முடிக்கு நல்லது.