காலை வெறும் வயிற்றில் ஜீரா தண்ணீர் குடிப்பதில் இத்தனை நன்மைகள் இருக்கா?

By Gowthami Subramani
08 Jun 2025, 10:31 IST

காலையில் வெறும் வயிற்றில் சீரகத் தண்ணீர் அருந்துவது பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளிலிருந்து நிவாரணம் அளிக்கிறது. இதில் வெறும் வயிற்றில் ஜீரா தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் சிலவற்றைக் காணலாம்

ஊட்டச்சத்துக்கள்

சீரகத்தில் இயற்கையாகவே வைட்டமின் ஏ, ஈ மற்றும் கே போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இதில் இரும்பு போன்ற தாதுக்கள், கால்சியம், மக்னீசியம் போன்ற சத்துக்களும் உள்ளது. இது தவிர, சீரகத்தில் நார்சத்துக்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன

எடை மேலாண்மைக்கு

எடை நிர்வாகத்தில் சீரகம் முக்கிய பங்கு வகிக்கிறது. உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் ஜீரா தண்ணீரைக் குடிக்கலாம். இது உடலில் வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்த உதவுகிறது

செரிமான மேம்பாட்டிற்கு

சீரகத்தில் உள்ள ஆரோக்கியமான கலவைகள் செரிமான நொதிகளின் உற்பத்தியைத் தூண்ட உதவுகிறது. வெறும் வயிற்றில் சீரகத் தண்ணீர் அருந்துவது செரிமானம் மற்றும் ஊட்டச்சத்து உறிஞ்சுதலுக்கு உதவியாக அமைகிறது

வீக்கத்தைக் குறைக்க

சீரகத்தில் உள்ள அழற்சி எதிர்ப்புப் பண்புகள் பல்வேறு நோய்களால் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது

நச்சுக்களை நீக்க

சீரகத்தில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களை நடுநிலையாக்குகிறது. இவை உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை ஆதரிப்பதன் மூலம் நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது

சுவாச ஆரோக்கியத்திற்கு

காலையில் வெறும் வயிற்றில் ஜீரா தண்ணீர் அருந்துவது இனிமையான விளைவை ஏற்படுத்துகிறது. இது பாரம்பரிய மருத்துவ முறைகளில் சுவாச ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுவதாகக் கூறப்படுகிறது

தயாரிக்கும் முறை

சீரகத்தை சுமார் 5-10 நிமிடங்கள் நீரில் கொதிக்க வைத்து, அதை அறை வெப்பநிலையில் குளிர்விக்கலாம். பிறகு இதை வடிகட்டி காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இதில் விரும்பினால் தேன் அல்லது எலுமிச்சை சேர்த்துக் குடிக்கலாம்