கொள்ளு தண்ணீர் குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்குப் பல்வேறு நன்மைகளைத் தருகிறது. அதிலும் குறிப்பாக, வெறும் வயிற்றில் அருந்துவது மிகுந்த நன்மை பயக்கும்
உடல் எடை குறைய
கொள்ளுவில் புரதம் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இது உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. இது எல்டிஎல் கொழுப்பைக் குறைக்கவும், நல்ல கொழுப்பை அதிகரிக்கவும் உதவுகிறது
கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க
கொள்ளு தண்ணீரில் நார்ச்சத்துக்கள் மற்றும் லிப்பிடுகள் உள்ளது. இது இரத்தத்தில் உள்ள எல்டிஎல் கொழுப்பைக் கட்டுப்படுத்தவும், இதய அடைப்பு ஏற்படும் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகிறது
நீரிழிவு நோய்க்கு
கொள்ளு பருப்பு உடலில் இரத்த சர்க்கரையைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இவை உடலில் இன்சுலின் எதிர்ப்பையும் குறைக்கிறது. இதன் மூலம் நீரிழிவு நோய்க்கு நன்மை பயக்கும்
சிறுநீரகக் கற்களை அகற்ற
வெறும் வயிற்றில் கொள்ளு தண்ணீர் குடிப்பதன் மூலம் சிறுநீரக பிரச்சனையிலிருந்து விடுபடலாம். மேலும் இது சிறுநீரகக் கற்கள் அபாயத்தைக் குறைக்கிறது
மாதவிடாய் பிரச்சனைக்கு
கொள்ளு தண்ணீர் குடிப்பது மாதவிடாய் பிரச்சனைகளைக் குறைக்க உதவுகிறது. இது அதிக இரத்தப்போக்கு, வயிற்று வலி போன்றவற்றைக் குறைக்கும்
எப்படி குடிப்பது?
1 கிளாஸ் நீரில் ஒரு கைப்பிடி கொள்ளு சேர்த்து இரவு முழுவதும் ஊறவைக்க வேண்டும். பின் இந்த கொள்ளு தண்ணீரைக் காலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம். பிறகு கொள்ளுவையும் மென்று சாப்பிடலாம்