காலையில் கிராம்பு நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

By Gowthami Subramani
20 Aug 2024, 08:00 IST

கிராம்பு நீரை தினமும் காலை நேரத்தில் குடிப்பது பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. இதில் கிராம்பு நீர் உட்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து காணலாம்

ஊட்டச்சத்துக்கள்

கிராம்புகளில் வைட்டமின் சி, கே, ஃபோலேட் மற்றும் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் உள்ளது. இது தவிர, ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளும் நிறைந்துள்ளது

தலைவலி பிரச்சனைக்கு

கிராம்பு தண்ணீர் குடிப்பதால் தலைவலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும். மன அழுத்தம் அல்லது தூக்கமின்மை காரணமாக காலையில் தலைவலியால் அவதிப்படுபவர்கள், அடிக்கடி தலைவலி பிரச்சனையை கொண்டிருப்பவர்கள் போன்றோர் கிராம்பு நீரை அருந்தலாம்

நீரிழிவு நோய்க்கு

தினமும் காலையில் கிராம்பு நீர் உட்கொள்வது நீரிழிவு நோய்க்கு நன்மை பயக்கும். ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்க கிராம்பு நீர் உதவுகிறது

நல்ல செரிமானத்திற்கு

கிராம்பு தண்ணீரை குடிப்பதால் வாயு மற்றும் அஜீரண பிரச்சனையில் இருந்து நிவாரணம் தருகிறது. மேலும் நெஞ்செரிச்சலில் இருந்தும் நிவாரணம் அளிக்கிறது. எனவே செரிமானம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து விடுபட, கிராம்பு நீரை குடிக்கலாம்

நோயெதிர்ப்புச் சக்தி அதிகரிக்க

இதில் உள்ள வைட்டமின் சி, கே மற்றும் மாங்கனீசு போன்றவை உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. கிராம்பு நீரை தினமும் குடித்து வருவதன் மூலம் வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாப்பாக இருக்கலாம்

சரும ஆரோக்கியத்திற்கு

தினமும் காலையில் கிராம்பு நீர் குடிப்பது தோல் தொடர்பான பிரச்சனைகளைக் குறைக்கிறது. இதன் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் ஃப்ரீ ரேடிக்கல்களிலிருந்து சருமத்தைப் பாதுகாப்பதுடன் வயதான அறிகுறிகளைக் குறைக்கிறது