தூங்கும் முன் இலவங்கப்பட்டை இஞ்சி டீ குடித்தால் என்னாகும் தெரியுமா?

By Gowthami Subramani
06 Jan 2025, 16:00 IST

இரவு தூங்கும் முன்பாக இலங்கப்பட்டை, இஞ்சி சேர்த்து தயார் செய்யப்பட்ட டீயை அருந்துவது மிகவும் நன்மை பயக்கும். இதில் இரவில் இலவங்கப்பட்டை இஞ்சி டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளைக் காணலாம்

செரிமான ஆரோக்கியத்திற்கு

இலவங்கப்பட்டை இஞ்சி தேநீர் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. இந்த பானத்தைத் தூங்கும் முன் அருந்துவது வீக்கம் மற்றும் அசௌகரியத்தை குறைக்கிறது

இரத்த சர்க்கரையை நிர்வகிக்க

இந்த பானத்தைத் தயார் செய்ய பயன்படுத்தப்படும் இலங்கப்பட்டை இரத்த சர்க்கரை அளவை உறுதிப்படுத்த உதவுகிறது. இது இரவு நேரத்தில் இரத்த சர்க்கரையை நிர்வகிக்க உதவுகிறது

இதய ஆரோக்கியத்திற்கு

இலவங்கப்பட்டையில் உள்ள ஆரோக்கியமான கலவைகள் ஆரோக்கியமான இரத்த ஓட்டம் மற்றும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க

இலவங்கப்பட்டை இஞ்சி டீயில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது. இவை உடலில் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தவும், நோய்த்தொற்றுக்களை எதிர்த்துப் போராடவும் உதவுகிறது

மூட்டு, தசை வலியைக் குறைக்க

இஞ்சியில் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் நிறைந்துள்ளது. இந்த பண்புகள் மூட்டு அல்லது தசை வலியைக் குறைத்து, தளர்வைத் தருகிறது

சிறந்த தூக்கத்திற்கு

இந்த பானம் அருந்துவது நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்துவதன் மூலம் அமைதியான தூக்கத்தை ஊக்குவிக்கிறது

மனதை அமைதிப்படுத்த

இந்த சூடான கலவையான மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. இது அமைதியான இரவு ஓய்வுக்கு வழிவகுக்கிறது